பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (M. M. D. A.) பள்ளியின் வளர்ச்சியினைக் கருதி இதை விரிவு செய்ய நினைத்தோம். பல பெற்றோர்கள் நாங்கள் மேன்மேலும் வளர்வதில் அக்கரை காட்டினார்கள். மேலும் இங்குள்ள 'பள்ளி, பெண்களுக்கெனவே அமைந்த காரணத்தாலும் எங்கள் பள்ளியில் பயிற்று முறை தேர்வில் நூற்றுக்குநூறு வெற்றி, மாணவர் தம் ஒழுக்கநெறி முதலியவற்றின் திறனும் தெளிவும் கண்டதாலும் நல்லவர்கள் ஆண்களுக்கும் இத்தகைய பள்ளி ஒன்று தொடங்கவேண்டும் என விரும்பி னர். இறையருளும் முன்நின்றது. எனவே ஆண்பிள்ளைக்கு எனத் தனிப்பள்ளி நிறுவு ம் முயற்சியினை மேற் கொண்டோம். எங்களுக்கு அடுத்துள்ள சுமார் 3 மனை யுள்ள நிலத்தை வாங்க முயன்றோம். அவர்கள் பெரும் விலை சொன்னதாலும் வேறு வகையில் எங்களுக்குத் தொல்லை கொடுக்க நினைத்தமையாலும் அந்த முயற்சி யினைக் கைவிட்டோம். மேலும் தனியாக ஆண்கள் பள்ளி நிறுவ அந்த இடமும் போதாது, ஆகவே 19.1-77.ல் விட்டு வசதி வாரியத்தாரை அணுகிக் கடிதம் தந்தோம். அவர்கள் தங்கள் 7291/G.VI.5/77 எண்ணுள்ள 28-3-77 நாளிட்ட கடித வழியே அண்ணா நகரிலே பள்ளிக்கு அடுத் துள்ள 140A அல்லது 633A உள்ள் இடங்களைச் சுட்டி, இரண்டில் ஒன்றை எடுத்துக்கொள்ளச் சொன்னார்கள் நாங்களும் உடனே 5.4.77.23 மனையுள்ள 633Aஎண்ணுள்ள மனை பள்ளிக்கு அருகில் இருந்தமையாலும் அளவில் சற்றே பெரிதாக இருந்தமையாலும் அதை எடுத்துக் கொள்வதாக எழுதினோம். ஆயினும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக்கு அமைந்த செயலர்-உறுப்பினர் தம் 11369/77 C 1எண் ணுள்ள 10.5-77 நாளிட்ட கடிதத்தில் அந்த இடம் விளையாட்டுக்கென ஒதுக்கப் பெற்றதெனவும். எனவே