பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 அதை விட்டு, கல்விக்கெனவே ஒதுக்கப்பெற்ற 4648 எண்ணுள்ளதில் ஒரு பிரிவினை எடுத்துக்கொள்ளலாம் என வீட்டு வாரியத் தலைவருக்கு எழுதினர். அதன் படி ஒன்றும் எங்களுக்கும் அனுப்பப் பெற்றது. அதன் படியினைக் கண்டபின் நாங்க ளு ம் அதற்கும் இசைந்து, உடன் 18.5-77.ல் எங்கள் உடன்பாட்டினை வீட்டு வசதி வாரியத்துக்கு அனுப்பினோம். வீட்டுவசதி வாரியத்தாரும் தங்கள் C6/7291/77 எண்ணுள்ள 23.5.77 நாளிட்ட கடிதத் தில் முறைப்படி அந்த நிலத்தினைத் தனியாக்கி, 4648B என்ற எண் தந்து, சுமார் 76 மனையினை எங்களுக்கு தந்த னர். அதற்கும் எங்கள் இசைவினைத் தெரிவித்து 5.6.77-ல் கடிதம் எழுதினோம். பின் வீட்டுவசதி வாரியத் தலைவர் தம் 17.6.77 நாளிட்ட கடிதப்படி 25.9.77.ல் ஒன்றரை லட்சத்துக்கு உரிய காசோலையினை அனுப்பி, மீதமுள்ள பாதிப்பகுதியினை அந்த ஆண்டு இறுதிக்குள் கட்ட இசைவு தரவேண்டினோம். 9.7.77.ல் அவர்கள் இசைவு பெற்றுச் செயல்பட விரும்பி, கடிதம் எழுதினோம். அவர்களும் இசைந்து 15-7.77.ல் அந்த இடத்தை எங்களிடம் முறைப் படி ஒப்படைத்து விட்டனர். இதற்கிடையில் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் செய்த செயல் எங்களைத் திடுக்கிட வைத்தது. 10-5-77-ல் இந்த இடத்தினை எங்களுக்கு ஒதுக்க வேண்டுமென ஆணை யிட்ட அதே பெருநகர் வளர்ச்சிக் குழுமம், 11.7.77.ல் அந்த இடத்தை எங்களுக்கு ஒதுக்க வேண்டாம் எனவும் வேண்டு மானால் வேறு ஓர் இடத்தினை ஒதுக்கித் தரலாம் எனவும் கடிதம் எழுதிற்று. எந்த அடிப்படையில் இப்படி எழுதிற்று என்பதுதான் வேடிக்கையானது. அண்ணாநகரில் விளையாட்டு இடங்கள் இல்லையாம். அதனால் இந்த இடம் விளையாட்டு இடமாக ஒதுக்கப்பெற வேண்டுமாம். மாற்று இடம் தரலாமாம். ஏன் அந்த மாற்று இடத்தினை விளையாட்டிடமாக அமைத்துக்கொள்ளக்