பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 தேவையும் ஏற்பட்டன. வீட்டுவசதி வாரிய அமைச்சர் (தொழிலாளர் நலத்துறை அமைச்சர்) அவர்களுக்கும் தமிழகத் தலைமை அமைச்சர் அவர்களுக்கும் குழுமத்தின் போக்கினை விளக்கத் தெளிவாகக் கடிதம் எழுதினோம்: அரசாங்கமும் இதை நன்கு பரிசீலனை செய்து, பெருநகர் வளர்ச்சிக் குழுமப்போக்கு முறையற்றதென்பதைச் சுட்டி, எங்களுக்குக் கொடுத்ததை மாற்ற இயலாது என்று 46384/A2/77-2 எண்ணுள்ள கடிதத்தை 27.12.77-ல் எழுதிற்று. எங்களுக்குப் படியும் வந்தது. அரசாங்க முடிவே ஆனமையின் இத்துடன் அதன் தொல்லை நீங்கிற்று என மகிழ்ந்தோம் நாங்கள். ஆயினும் அரசாங்கத்தில் இருந்த உயர் அதிகாரி ஒருவர் அவர்கள் எப்போதும் தொல்லை தந்து கொண்டிருப்பார்களென்றும், என்றும் விழிப்பாக இருக்கவேண்டும் எனவும் எங்களை எச்சரித்தார். அவர்கள் சொல்லியதை அப்போது நாங்கள் பெரிதாக எண்ணவில்லை. ஆயினும் அடுத்துக் குழுமத்தார் செயல்கள் அப் பெரியவர் சொல்லை மெய்யாக்கின. இத்துடன் அவர்கள் தொண்டு’ முடிந்திருந்தால் நான் இந்த நூலில் இப்பகுதியினை எழுதியிருக்கத் தேவையே இருந்திருக்காது. (இ ந் த மனை பற்றிப் பின்னால் எழுந்த சிக்கல்கள் பற்றியும் அதற்குத் துணைநின்ற நல்லவர்கள் பற்றியும் வீட்டுவசதி வாரியத்தார் விசித்திரச் செயல்கள் பற்றியும் தனியாக "நாங்களும் வீட்டுவசதி வாரியமும்’ என்ற தலைப்பில் எழுதி யுள்ளதை இந்த நூலின் மற்றொரு பகுதியில் காணலாம்). மேலும் இந்தப் பெருநகர் வளர்ச்சிக்குழுமம் மேலுள்ளவர் கள் எதேச்சதிகாரப் போக்கைக் கண்டுதானோ ஏனோ, அது வரையில் இல்லாத வகையில் அவர்களுக்கெல்லாம் மேலாகத் துணைத் தலைவர் (Vice chairman) என்ற பதவியை ஏற்படுத்தி, அதற்கெனத் தக்கவர் ஒருவரையும் நியமித்து, குழுமத்தின் செயல்களைச் செம்மைப் படுத்தியுள்ளனர் என எண்ண வேண்டியுள்ளது. அத்தகைய துணைத்தலைவர் பின் அக் குழுமத்தால் எனக்கு உண்டான இடர்ப்பாடுகளை நீக்கிய வகைகளையெல்லாம் அடுத்துவரும் பக்கங்களில்