பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i41 எழுதுகிறேன். எங்களுக்கு வீட்டுவசதி வாரியத்தாரால் முன்னரே ஒதுக்கப் பெற்ற மனையில் நான்கடுக்குக் கட்டடம் கட்ட நினைத்து, வரைப்படமும் வரைந்து நகராண் கழகம், பெருநகர் வளர்ச்சிக்குழுமம் ஆகிய இரண்டின் இசைவினைப் பெற்றுக் கட்டிடத்தையும் கட்டி முடித்தோம். விரைந்து நான்கைந்து மாத அளவில்|அக் கட்டிடம் உயர்ந்து அதில் வகுப்புகள் செயல்பட ஆரம்பித்த போது அவர்கள் கண்ணையும் கருத்தையும் உறுத்திற்றோ என நினைக்கவேண்டியுள்ளது. எங்கள் கட்டிடத்துக்குப் பக்கத்திலேயே அரசாங்கத் துறைகளுள் சிலவும் தனியார் களும் நடைபாதைகளில் கடைகளை அமைத்துத் தொல்லை விளைக்கத் தொடங்கவும், அதே வேளையில் எதிரில் இருக்கும் வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான கட்டிடத்தில் எல்லா விதிகளையும் கடந்து சாலையை ஒட்டியே சிற்றுண்டிச் சாலை போன்ற கடைகளை அமைக்கவும், கீழே அடித்தளத்தில் நாங்கள் வரைப்படத்தில் குறித்தபடி அலுவலகங்களோ நூல்நிலையமோ வகுப்பு களோ அமைக்க முடியவில்லை. எனவே அவற்றுள் யாதொரு மாற்றமும் இன்றி உபயோகத்தை மாற்ற நினைத்தோம். அதுவும் பள்ளிக்குப் பயன்படும் வகையில் அமையும் முறையினையே மேற்கொண்டோம். எங்கள் பள்ளிக் குழந்தைகள் அனைவரும் 1976 முதலே வங்கியில் தான் சம்பளம் கட்டுவர்; அப்படியே ஆசிரியர்களும் வங்கியிலேயே சம்பளத்தைப் பெறுவர். குறைந்த சம்பளம் கொடுத்து அதிக கையெழுத்து வாங்கும் கொடுமை நீக்கவும் மாணவரிடம் அதிக தொகை வசூலிக்கின்றோம் என்ற பெயரில்லாதிருக்கவும் பள்ளியில் பணப்புழக்கத்தைத் தவிர்க் கவும் இந்த ஏற்பாடு செய்தோம். பல்கலைக் கழகங்களோ பிற அர சாங்க நிலையங்களோ பிறவோ இந்த ஏற்பாட்டினைச் செய்ய நினைக்கும் முன்பே நாங்கள் இவ்வழியில் செயல்பட்டோம். ஆயினும் அந்த வங்கி பள்ளியின் வெளியே வேறிடத்தில் அமைந்திருந்தமையால் பலர் தொல்லையுற்றனர். அதைத் தவிர்க்க எங்கள்