பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 பள்ளிக் கட்டடத்திலேயே வங்கி அமைக்கத் திட்ட மிட்டோம். அத் து ட ன் கட்டடத்துக்கு வேண்டிய தொகையை வங்கி கடனாகத் தரவேண்டின்ோம். இந்த இசைவினைத் திருவாங்கூர் ஸ்டேட் வங்கி நிறைவேற்ற முன்வந்தது. எனவே கீழ்த் தளத்தில் வங்கி அமைக்க முடிவு செய்தோம். அப்படியே ஆயிரத்து முந்நூறு பிள்ளைகளும் (பெரும்பாலும் பெண்கள்) ஐம்பது ஆசிரியர்களும் உள்ள பள்ளிக்குச் சிற்றுண்டிச் சாலையும் தேவைப்பட்டது. இவற்றை அமைக்க முயன்று அதற்கென இரும்புச் சட்டக் கதவுகளும் அமைத்தோம். இது தவறு என உடனே பெருநகர் வளர்ச்சிக் குழுமம் 30.10.78-ல் எங்களுக்கு ஓர் நோட்டீஸ் அனுப்பி, நாங்கள் அவர்கள் இசைவு பெறாம லேயே அக் கட்டிடத்தைக் கட்டியதாகவும் அது உடனே நிறுத்தப்படவேண்டும் எனவும் இல்லையானால் எங்கள். மேல் குற்ற வழக்கு தொடரப்பெறுமெனவும் அச்சுறுத் தியது. அப்படியே 28.10.78-ல் வீட்டுவசதி வாரியத்தாரை யும் கடிதம் எழுதவைத்தது. ஆயினும் உடனே அவர்களுக்கு இரண்டின் அவசியத்தையும் அவற்றொடு பள்ளிக்கு உரிய தொடர்பினையும் உதவியையும் சுட்டிக் கடிதம் (9.11.78) எழுதினோம். எனினும் மறுபடியும் 21.11.78 (எண் 22665/78|N2) குழுமம் கடிதம் எழுதிற்று. மறுபடியும் அவற்றின் அவசியம் பற்றியும், பெற்றோர் சங்கம் முதலிய பற்றித் தொடர்பான உறுப்புக்கள் இட்ட தீர்மானங்களை யும் இணைத்தும் விளக்கி எழுதியும் அவர்கள் இசைய வில்லை. நல்லவேளை, நான் முன்னே குறித்தபடி, இவர் களுக்கு மேலாகத் துணைத்தலைவர் அவர்கள் வர, அவர் களிடமும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அவர் களிடமும் விண்ணப்பித்தோம். அப்போதும் சில சில நிபந்தனைகளை இட்டு, வங்கி அமைக்கக் குழுமம் இசைவு தந்து, வேறு வரைப்படம் வரையவேண்டும் என வற்புறுத்தி உத்தரவு பிறப்பித்தது. அப்படியே PPA552/79 எண்ணுள்ள வரைப்படத்தினை அனுப்பினோம். அதற்குக் குழுமம் எண் 15189179|N2 எண்ணுள்ள கடிதத்தினை 5.11.79.ல்