பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 அனுப்பியது. ஏறக்குறைய ஒர் ஆண்டு கழித்தும் அது அனுப்பிய பதில் வியப்பாக இருக்கும். முதல் குறிப்பின்படி வங்கி பணி தொடங்கிவிட்டது. அடுத்து, பள்ளிகென பள்ளியின் பெயரால் அமைக்கத்திந்த சிற்றுண்டிச் சாலையினை அது வேறு பெயரில் அமைத்த காரணத்தால், அந்த நிலையினை நீக்க முன்னரே இருவழக்கு கள் தொடங்கப் பெற்றுள்ளன. தண்ணீரும் மின்சாரமும் கேட்டு அவர்கள் தொடுத்த வழக்கு இரு நீதிமன்றங்களிலும் தள்ளப் பெற்றன. எனினும் முடிந்த முடிவு அவர்களுக்குச் சாதகமாக நின்றமையாலும் எங்கள் பள்ளிக்கும் சிற்றுண்டிச் சாலை தேவையானமையாலும், வள்ளியம்மாள் உணவு விடுதி” எனவே பெயர் வைக்க அவர்கள் இசைந்தமையாலும் நாங்கள் உணவு சாலை நடத்த இசைவு தந்தோம். - கடிதத்தில் குறித்த முன்னர் காட்டிக் குறிக்கப்பெறாத மற்றையவற்றையும் நோக்க வேண்டுகிறோம். முன் பக்கம் வழியே இருக்கக் கூடாதாம். நாங்கள் புறச் சுற்றுச் சுவர் இட்டுப் பத்திரப் படுத்திய பிறகே, பிள்ளைகள் பெருவாரி யாகப் புழங்க வேண்டியிருந்ததால் பெரும் வாயில்களுக்கு இரும்புக் கதவுகள் அமைத்தோம். அது தவறாம். மற்ற இரண்டும் இன்றும் வியப்பானவையே. முன்னே கார்கள் நிறுத்த இடம், பள்ளிக்கு வருகின்ற வண்டிகள் பள்ளியை ஒட்டி நிற்கக் கூடாத நிலை முதலிய யாவற்றையும் எண்ணிப் பார்க்க வேண்டுகிறோம். எதிரிலே வீட்டுவசதி வாரியக் கட்டிடமாகிய சிந்தாமணிக்கு வரும் வண்டிகள் பெரும் லாரிகள்-டிரக்குகள் எங்கள் பள்ளியை ஒட்டிச் சாலையில் நிறுத்தப்படுவது அவர்கள் கண்ணில் படவில்லை. எங்களைச் சுற்றிப் புறச்சுவரும் இல்லாது கடைகள் கட்டி வீட்டுக்கென ஒதுக்கப்பெற்ற மனைகளை மாற்றி வாணிபத் தலங்களாகிய இடங்கள் அவர்கள் கண்களுக்குப் படவில்லை. அண்ணாநகரில் மட்டுமன்றிப் பல இடங்கள் வீடுகள் கடை களாகவும் வங்கிகளாகவும் மாற்றப்பட்டமை அவர்களுக்குத் தெரியவில்லை. அரசாங்கத்துறைகளே எங்கள் பள்ளிக்கு