பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 எதிரிலே பிள்ளைகளுக்கு இடைஞ்சல் விவிைளக்கும் வகை யில் பெரும் கூண்டுகளை அமைத்து வாணிபம் நடத்திப் போக்குவரத்தைத் தடைசெய்வதோடு சுற்றுப்புறத் தூய்மை யைக் கெடுப்பதும் அவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லை" எல்லாவற்றையும் முறையாக, வரைப்பட எல்லை கடவாது கட்டி, பள்ளிக்குத் தேவையான வங்கியும் சிற்றுண்டிச்சாலை யும் அமைப்பதுதான் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. எனினும் பிறகு மேலுள்ள அரசாங்க அதிகாரிகள் தலையீட்டால் நாங்கள் நல்ல முடிவினைப் பெற்றுச் செயல்பட்டு வருகின்றோம். கதை இத்துடன் முடியவில்லை. மேலும் தொடர்கிறது. . புதிதாக நாங்கள் வாங்கிய இடத்தில் உடன் கட்டடம் தொடங்க இயலவில்லை. பச்சையப்பன் அறநிலையத்தார். அந்த இடம் தங்களுக்கு வேண்டுமெனக்கூறி, எங்கள் இடத்தில் ஒரு பெயர்ப்பலகையினை நட்டுத் தொல்லை தந்தனர். (இதுபற்றியெல்லாம் பின் விளக்க இருக்கிறேன்) எப்படியோ 1977-ல் பல லட்சங்கள் கட்டப்பெற்று உரிமை யாக்கப் பெற்ற அந்த நிலத்தில் 1981 ஏப்பிரலுக்குப் பிறகு தான் நாங்கள் செயல்பட முடிந்தது. புதிய 4648B இடத்தில் கட்டடம் கட்டுவதற்கென வரைப்படம் வரைந்து உரிய முறைப்படி வீட்டுவசதி வாரியத்தின் இசைவினையும் பெற்று நகராண் கழகத்துக்கு அனுப்பினோம். அது 429/81 ஆக 6.7.81-ல் பதிவு செய்யப் பெற்று முறையான ஆய்வுக்குப்பின் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் இசைவுக்கென அனுப்பப்பெற்றது. அங்கே உள்ள அதிகாரிகள் பழைய நினைவுகளையெல்லாம் கொண்டு அதை எப்படியும் தடுக்க வேண்டும் என முடிவு கட்டிவிட்டனர். அக் குழுமத்தின் மேலுள்ள இரு பேரதிகாரி களும் மாற்றப்பெற்றுப் புதியவர்கள் வந்திருந்தனர். அவர்கள் இருவரும் நியாயமான நேரியமுறையில் எங்க ளுக்கு உதவி இராவிட்டால் நாங்கள் இசைவினைப் பெற் றிருக்கவே முடியாத நிலை உருவாகி இருக்கும்.