பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148. கீழே உள்ள சில உயர் அதிகாரிகளை நான் நேரில் சென்று கண்டபோது, அதில் ஒருபக்கம் இன்னும் அதிகமாக இடம் ஒதுக்க வேண்டும் எனவும் மாற்று வரைபடம் தர வேண்டும் எனவும் கேட்டனர். உடனே வேறு மாற்று வரைப்படம் தயாரித்து உரியமுறையில் அங்கே சேருமாறு , செய்தோம். எனினும் ஒருமாதம் கழிந்தபிறகும் அவர்கள் உரிய நடவடிக்கை ஒன்றும் எடுக்கவில்லை. அத்துடன் நான் சென்று நேரில் கேட்டபோது இடையில் உள்ள ஒரிரு உயர். அதிகாரிகள் தரக்குறைவாகவும் இழிவாகவும் பேசியநிலை . மிக இரங்கத் தக்கதாகும். எங்கள் இஷ்டம் போல்தான் நாங்கள் ஆராய்வோம்-இதில் நிறையக் குறைகள் உள்ளன. யார் சொன்னாலும் எங்களுக்கு அக்கறையில்லை; நீ வர வேண்டாம் என்றும் உத்தரவிட்டார் ஒர் அதிகாரி. அவரை விட்டு சற்றே மேனிலையில் உள்ள மற்றொருவரை நேரில் கண்டேன். அவர் எனக்கு முன்னரே அறிமுகமானவராக இருந்தபோதிலும் என்னைக் கண்டதும் உட்காரக் கூடச் சொல்லவில்லை. என்னைப் பார்த்த நிலையே பயங்கரமாக இருந்தது. இராவணன் முன் அனுமன் நின்ற நிலையினை நான் எண்ணிக் கொண்டேன். எனினும் எனக்கு அத்தகைய: ஆற்றல் இல்லையாதலால் நின்று கொண்டே பதில், சொன்னேன்; நான் இன்னார் என்றும் பள்ளியின் வரைப்படம் பற்றி வந்ததாகவும் சொன்னேன். உடனே அவர் அந்த இடம் உங்களுக்குச் சொந்தமில்லையே; அதில் எப்படிக் கட்டடம் கட்டலாம் என்று வெடிகுண்டை, எறிந்தார். நான் அமைதியாக 16.4.81-ல் வந்த அரசாங்க, உத்தரவை காட்டி, அதன் படி ஒன்றும் விண்ணப்பத்துடன் இணைத்திருப்பதையும் சுட்டினேன். அவர் உடனே அதைப் பார்த்து, இதில் உங்களைக் கட்டடம் கட்டச் சொல்லி, உத்தரவு இல்லையே; எப்படிக் கட்டலாம்" என்றார். பள்ளிக்கென வாங்கிய இந்த இடத்தில் பள்ளிக்கெனக் கட்டடம் கட்டாது வேறு எதற்காகப் பயன்படுத்த வேண்டும் என்று மறுபடியும் தாழ்ந்து கேட்டேன், மேலும், தி. தி.-10,