பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j46 - மனைக்குப் பொறுப்பான வீட்டுவசதி வாரியமே கட்டடம் கட்ட இசைவு தந்தமையைக் காட்டினேன். உடனே அவர் அதெல்லாம் எனக்குத் தெரியாது? எங்கள் வரைப்படத்தின் மேலேயே அவர்கள் இசைவினைக் குறித்து வாங்கி வேறு வரைப் படங்களைக் கொண்டு வா' என்றார். நான் மறுபடியும் சென்ற ஏப்பிரல் திங்களிலிருந்து அந்தமுறை மாறி, வெறும் சான்றிதழ் (நிலப்படத்துடன்) தருவது முறையாக உள்ளதைத் தாங்கள் அறிவீர்களே! மறுபடி எப்படி அவர்களைக் கேட்பது, என்றேன். அவர் அதெல்லாம் எனக்குத் தெரியாது' அப்படி வாங்கி வர இல்லையானால் ஒன்றும் செய்யமுடியாது. போகலாம்' என்றார். நான் அவருடைய பழைய காழ்ப்புணர்ச்சியையும் கடுகடுப்பையும் எண்ணிக்கொண்டு இறைவனே இவரை மன்னியும், என்ற வேண்டுதலோடு வெளியே வந்தேன். பின் குழுமத்தின் மேல்நிலையில் உள்ளவரிடம் இது பற்றி முறையாக விளக்கி, நேரிய முறையில் வந்த இந்த விண்ணப்பத்தைத் தடுப்பது தக்காது என்பதையும் தக்கார் வழியில் எடுத்துக் காட்டினேன். அந்த மேனிலையாளர்கள் யாவும் சரியாக இருப்பதைக் கண்டு அவர்கள் மறுப்பதற்குக் காரணம் கேட்க, சரியான பதில் செல்லாமையால், அவர்கள் கையாலேயே ஆணையும் பிறப்பித்தார்கள். அப்படியும் அந்த ஆணை என் கைக்கு வருவதற்கு ஒருசில நாட்கள் இடையில் தடையாக நிற்கக் கீழ்உள்ளவர்கள் வழி செய்தார் கள். பிறகு வேறு வழிஇன்றி முறையாக ஆணை வழங்கினர். இவ்வாறு பழமையும் பகைமையும் பாராட்டும் ஓரிரு அலுவலர் தவிர்த்து, குழுமத்தின் மேனிலையிலும் இடையிலும் அடுத்த நிலையிலும் உள்ள அதிகாரிகளும் பிறரும் எங்களை ஏற்று அன்புடன் நடத்தி, உள்ளன விளக்கி ஆவனவற்றிற்கு வழி காட்டி உதவிய நிலையினையும் நாங்கள் என்றென்றும் மறக்க முடியாது. அவர்கள் இருக்கும் திசை நோக்கி வணங்கி வாழ்த்தக் கடமைப்பட்ட வனாகின்றேன். .