பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. வீட்டுவசதி வாரியமும் நாமும் வீட்டுவசதி வாரியத்தைப் பற்றி நினைக்கும்போது நான் இருபது வருடங்களுக்கு முன் செல்லுகிறேன். இன்றைய அண்ணாநகரில் உலகக் கைத்தொழில் பொருட் காட்சி நடைபெற்ற அந்த நல்ல நாட்கள் என் முன் நிழலாடுகின்றன. எத்தனை பெருமுயற்சிகளுக்கிடையில் அந்த நாளில் நம்நாட்டுத் தொழில்கள் மட்டுமன்றிப் பிறநாட்டுத் தொழில்களையும் காட்டி வருங்காலத் தொழில் யுகத்தில் நம்நாடு எந்தெந்த வகையில் முன்னேற வேண்டும் என்பதைக் கோடிட்டு விளக்கிய செயல்முறை களை மறக்கமுடியுமா? பொருட்காட்சி முடிந்தது: பின் பொட்டல் காடுதானே மிஞ்சும்’ எனப் பலர் பேசினர். ஆயினும் அக்காலத்துத் தமிழக முதல்வராக இருந்த மாண்புமிகு பக்தவச்சலம் அவர்கள் இதைப் பெருநகராக்கத் திட்டமிட்டு அதற்கு வேண்டியவற்றைச் செயலளவில் மேற்கொண்டார்கள் என்பதை அவருடன் நெருங்கி இருந்த நான் அன்றே நன்கு அறிவேன். - அதற்கு முன்பே, நகர் வளர்ச்சிக் குழுமம் (City improvement trust) s76rp Quurrá SG F'Dasar5 தின் வழியே சென்னையில் வீடு அற்றோருக்கு இட ஒதுக்கீடு செய்து . தேவையானால் வீடும் கட்டிக் கொடுக்க ஏற்பாடு கள் அரசாங்கத்தால் செய்யப்பெற்றன. அயன்புரம் வெங்டேசபுரம் பகுதி, செனாய் நகர் பகுதி, ஆர்க்காடு சாலை, தென்தியாகராய நகர், மயிலை போன்ற இடங் களில் இன்று அந்தப் பெயரிலேயே அமைந்த டிரஸ்டு புரங்களாகிய இவை அந்த நாளை நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன. (அப்போது எனக்கு வெங்கடேச புரத்தில்-எண் 99 என எண்ணுகிறேன்-ஒரு மனை