பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 ஒதுக்கித் தந்தனர். அதில் நான் குறித்தபடியே வீடும் கட்டித்தந்தனர். எனினும் அதற்குள் நான் அமைந்தகரை யில் மனை வாங்கி வீடு கட்டத் தொடங்கியதாலும், நான் பணி செய்யும் பச்சையப்பருக்கு அது வெகுதொலைவில் இருந்ததாலும் நான் செலவு செய்த தொகையினை மட்டும் பெற்றுக்கொண்டு அன்று அரசாங்கத் துணைச் செயலராக இருந்த ஒருவருக்கு-திரு. கிருஷ்ணசாமிப் பிள்ளை என நினைவு-தந்துவிட்டேன். அப்படியே 1949-ல் நான் . வீடு கட்டி முடித்தபிறகு செனாய் நகரில் எனக்கு ஒதுக்கிய வீட்டினையும் தந்துவிட்டேன்). ஆனால் வீடு கட்டும் பணி விரிவடைய விரிவடைய-நாடு முழுவதுக்கும் அதன் தேவை உண்டாக பல ஆக்கப் பணிகள் செய்யவேண்டிய நிலையில் அதுவே வீட்டு வசதி வாரியம் என 1968-ல் பெயர் பெற்றது என எண்ணுகிறேன். ஆயினும் அதற்குமுன்பே இன்றைய அண்ணாநகரில் மனைகள் ஒதுக்கீடு தொடங்கப் பெற்றது. சட்டப்படி எனக்கு ஒரு வீடு இருக்கின்ற காரணத்தால்-நான் ம ைன யி ைன ப் பெற உரிமை யற்றவனே. எனினும் அமைந்தகரை எல்லையில் என் மூன்று மனை நிலத்தை அரசாங்கம் எடுத்து கொண்டமையால் அதற்குப் பதிலாக ஒர் இடம் அண்ணாநகரில் அவர்கள் கொடுக்கக் கடமைப்பட்டவரானார்கள். அமைந்தகரை இடம் வந்ததையும் இங்கே காட்டல் தேவை எனக் கருதுகிறேன். நான் 1944-ல் சென்னைக்கு வந்து பச்சையப்பரில் பணி ஏற்றேன். அப்போது அங்கு வடமொழிப் பேராசிரியராகத் திதிரு. சண்முக முதலியார் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் அமைந்தகரை ஏகாம்பர நாதர் திருக்கோயிலின் பரம்பரை தர்மகர்த்தராகவும் இருந் தார்கள். 1945-46-ல் அக் கோவிலுக்குரிய நிலங்களை வீட்டு மனைகளாகப் பிரித்துப் பலருக்கும் மாதவாடகை அடிப் படையில்-உரிமை கோ யி லு க் கே உரியதாக-தந்து உதவினார்கள். ஒருநாள் அறையில்iஅவர்கள் தாமே வலிய வந்து நீங்கள் இந்த ஊருக்குப் புதிதாக வந்திருக்கிறீர்கள்.