பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I jø உங்களுக்கு இங்கே வீடுகட்ட மனை இல்லை. கோயில் நிலத்தில் ஒருபகுதியை உங்களுக்கு வாடகை உரிமைச்சீட்டு அடிப்படையில் தருகிறேன், பெற்றுக் கொள்ளுங்கள்' என்றார். என் முன்னோர்களோ-நானோ-கோயில் சொத்துக்கள் எதிலும் பங்குபெறாது அதுவரை வாழ்ந்து வந்தமையால் நான் தயங்கி நின்று, சிலநாள் கழித்து முடிவு செய்வதாகச் சொன்னேன். எனினும் அவர்கள் என்பேரில் கொண்ட அன்பின் காரணத்தாலே, நிலங்களைப் பிரிக்கும் போது எனக்கும் ஒன்றைப் பிரித்து வரைப்படங்கள் வாடகைப்பத்தரம் இவைகளைத் தயார் செய்து கொண்டு வந்தார்கள். அவர்கள் பெரியவர்: ஆண்டவன் பணிசெய் கின்றவர்: இறைவா: இது என்ன? என விழித்தநேரத்தில் அவர்கள் நீங்கள் விரும்பினால் இதன் முழுத்தொகை யினையும் கட்டிப் பிறகு உங்கள் பேரிலே பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறினர். தானே வந்தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும் வான்வார் கழல்' என்று மணிவாசகர் கூறியபடி, இதுவும் இறையருளே என ஏற்றுக் கொண்டேன். ஆயினும் அதில் ஒரு வீடும் கட்டவில்லை. பின் ஒரிரு ஆண்டுகள் கழித்து முறைப்படி, நாளிதழ், அரசாங்க இதழ் ஆகியவற்றில் விளம்பரம் செய்து, உரிய தொகையினைக் கோயிலுக்குக் கட்டி, அந்த இடத்தை முழு உரிமையுடன் பெற்றுக்கொண்டேன். அந்த நிலம் வந்திருக்கவில்லையானால் அ ைத குடிசைமாற்றுக் குடியிருப்புக்காக எடுத்துக்கொண்டு அண்ணாநகரில் இடம் தந்திருக்கமாட்டார்கள். இன்றைய வள்ளியம்மாள் கல்வி அறம் தோன்றியிருக்குமா என்பதே ஐயத்துக்குரியதாகும். எனவே திரு. சண்முகமுதலியாருக்கு நன்றியினையும், ஏகாம்பர நாதருக்கு வணக்கத்தையும் தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன். பின் அந்த நிலத்தை அரசாங்கம் எடுத்துக் கொண்டபோது கணிசமான தொகை தந்தனர். அதில் ஒரு பெருந்தொகையினைக் கோயிலுக்கென ஒதுக்கி, அரசாங்க ரிசீவர் கையில் ஒப்படைத்து, அதன் வருவாயினைக் கொண்டு, ஆண்டுதோறும் கார்த்திகை விழா நடத்த