பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 5 1 ஏற்பாடு செய்தேன். அண்ணாநகரிலும் சுற்றுப்புரங்களிலும் இவ்வாறு நிலங்களைப் பிரித்துக் கொண்டவர்களுக்கு மாற்று இடம் தந்தனர். அந்த இடங்களெல்லாம் எங்கெங்கோ தெருவின் நடுவில்-மூலையில்-முடுக்கில் அமைந்திருக்கும். எனக்கும் அப்படி ஏதேனும் தந்துவிடுவார் களோ என அஞ்சினேன். அப்போதே, முன் சிலவிடங்களில் நான் குறித்தபடி, என் அன்னையின் பெயரால் ஏதேனும் நிலைத்த கல்விப் பணி செய்ய முடிவு செய்தமையால் அதற் கேற்ற இடத்தினைத் தேடினேன். அப்போது அண்ணா நகரின் கீழ்ப்பகுதிக்கு மட்டுமே வரைப்படம் தயாரித்தனர். நான் அப்படத்தை முதலமைச்சர் வீட்டில் கண்டேன். அதைத் துருவி ஆராய்ந்தேன். தற்போதுள்ள இடம் 178வது மனை கடைகளுக்கு என ஒதுக்கிய பெரிய இடத்துக்குப் பக்கத்தில் மூன்று தெருக்களும் எல்லைகளாக அமைந்த டத்தில் இருந்ததைக் கண்டேன். இதைப் பெற்றால், பின் வாய்ப்பும் வசதியும் கிடைத்தால், பக்கத்து மனைகளை யும் வாங்கி அன்னையின் பெயரால் பள்ளி தொடங்கலாமே என எண்ணினேன். வரைப்படத்தையே ஊன்றிக் கவனித்ததைக் கண்ட முதல்வர் அவர்கள் அதில் என்ன அப்படி இருக்கிறது?" என்று கேட்டார். நான் எனக்கு மாற்று இடம் கொடுப் பதைப்பற்றியும் அது எங்கே அமைந்தால் என் அடிப்படைக்கு நன்றாக இருக்கும் என்பது பற்றியும் துருவிக் காண்பதைக் கூறினேன். உடனே அவர் சற்று நேரம் இரு, அங்கிருந்து ஓர் அதிகாரி வருவார். அவரிடம் சொல்லி விடுகிறேன். பின் நீ வேண்டியதை எடுத்துக் கொள்ளலாம்' என்றார். அவர் சொன்னபடியே அங்கே மு க் கி ய் அலுவலராக இருந்த ஒருவர் (திரு. சந்திரன் என எண்ணு கிறேன்) வந்தார். அவரிடம் என்னைப்பற்றிக் கூறிப் பயன் படத்தக்க இடத்தினைத் தருமாறு சொன்னார். அந்த அலுவலரும் அங்கேயே ஆய்ந்து இந்த 178 ஐ எனக்கு ஒதுக்கித்தந்தார். ஆம்! அன்றைய முதல்வரும் அந்த