பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 அலுவலரும் உதவியிராவிட்டால், எனக்கு எங்கே அமைந் திருக்குமோ? எவ்வாறாகயிருக்குமோ என எண்ணின் திகைப்பே உண்டாகிறது. இவ்வாறு வீட்டுவசதி வாரியத் தின் முன் ஒதுக்கிடம் எனக்கு அமைந்த அந்த நாள் முதல் இன்று வரை, எங்கோ ஒரிரு அலுவலர் தவிர மற்றைய அனைவரும் எங்கள் வளர்ச்சிக்கு வேண்டுவன செய்து வாழ்த்தி வருகிறார்கள். இதற்கிடையேதான் நான் ஐதராபாத் செல்ல நேர்ந்தது. (1966-67) எனினும் 67ல் திரும்பிய பிறகு நான் திட்டமிட்டபடி செயலாற்ற 1968ல் வீட்டில் பள்ளியினைத் தொடங்கி, 1969ல் அண்ணாநகரிலும் ஆரம்பப் பள்ளி யினைத் தொடங்கியதை எண்ணி, அனைத்துக்கும் மூலகாரணனான இறைவனை வணங்கி நிற்கின்றேன். பள்ளி தொடங்கியபின் பக்கத்தில் உள்ள சுமார் 14 மனைகள் கொண்ட இடத்தினை வீட்டுவசதி வாரியம் ஒதுக்கிய வகையினை முன்னமே குறித்துள்ளேன். வீட்டு வசதி வாரியத்தின் தலைவர்கள் மாறி மாறி வந்து கொண்டிருந்தனர். எங்கள் பள்ளியும் நாடொறும் வளர்ச்சி யுற்றுக் கொண்டே வந்தது. 178ல் - 1969ல் கீழ்த்தளமும் 70-71ல் முதல், இரண்டாம் தளங்களும் கட்டி முடித்த பின், பிள்ளைகள் எண்ணிக்கை ஐநூறுக்கும் மேல் சென்ற பின் என்ன செய்வது எனத் திசைத்தேன். அப்போதுதான் பக்கத்து மனைகளைப் பெற எண்ணிய எண்ணம் செயல்படத் துவங்கியது. அப்ப்ோது திரு. வாசுதேவன் என்பார் வாரியத் தலைவராக இருந்தார் என எண்ணுகிறேன். நேரில் சென்று அவர்களிடம் விண்ணப்பித்தேன். அவர்கள் அரசாங் கத்துடன் கலந்து, எங்கள் பள்ளிக்கு ஒட்டிய 7 மனை கொண்ட இடத்தினை (226C) முதலில் தர இசைந்தனர். இங்கே அமைக்க இருந்த கடைகளுக்கென அமைந்த கட்டிடத்தினை எதிர்ப்புறமாக மாற்றி இந்த இடம் எங்களுக்குத் தரப்பெற்றது. பின் எங்கள் வளர்ச்சியினையும், செயல்திறனையும் கண்டு மறுபாதியினையும் நான்