பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 யோகக் கட்ட வேண்டிய தொகைக்கு என்ன் செய்வது என்று ஏங்க வேண்டி வந்தது. எங்களுக்கு தனிச் சலுகை இன்றி, மற்றவர்களுக்குத் தந்த விலைக்கே தந்தனர். பெருஞ்சாலை கள் பக்கம் மனை 11,300/எனவும் மற்றப் பகுதி மனை 8,600/-எனவும் தந்தனர். நான்கில் ஒரு பகுதி உடன் கட்டியபிறகு மிகுதியை மூன்று ஆண்டுகளில் கட்டவேண்டும் என்ற ஏற்பாடு. முதன்முறையே கட்டத் தடைப்பட்டது. அதற்குள் அங்கிருந்த அலுவலர் ஒருவர் உடன் கட்டா விட்டால் த ந் தது எடுத்துக்கொள்ளப்படும் என்று நோட்டிஸ் விடுத்தார். எங்கும் நல்லவர் பலருக்கிடையில் நஞ்சுடையார் ஒருசிலர் இருப்பதுதானே உலக இயற்கை. எனினும் அதுபோது வாரியத் தலைவராக இருந்தவர் திரு. இலக்குமிகாந்தம் பாரதி அவர்கள். அவர்களிடம் நேரில் சென்று எங்கள் இ ய ல ள நிலையினை முறையிட்டோம். அவரும் பலவற்றை ஆராய்ந்து இலட்சக்கணக்கில் கட்டாதவர்களும் இருக்க எங்களுக்கு , இந்த நோட்டீஸ் விட்டது தக்கது அன்று என உணர்ந்து, மூன்றாண்டுகளுக்கு உரிய தவணையினை ஏழு ஆண்டுளுக்கென மாற்றித் தந்தனர். அதனால் நாங்கள் அதிக வட்டியினைக் கட்டவேண்டி வந்தபோதிலும் மாற்றித் தவணைத்தொகை குறைய, மகிழ்ந்து ஏற்றுக்கொண்டோம். அப்படியே முறையாகக் கட்டி முடித்தோம். இவ்வாறு கீழ் உள்ள ஓரிருவராலே இடர்ப்பாடுகள் அவ்வப்போது நேரு கின்றதேனும் அதே நிலையில் உள்ள மற்றவர்களாலும் உயர்மட்ட அதிகாரிகளாலும் எங்கள் வேண்டுகோள்கள் நிறைவுப்பெற, எங்கள் பணி குறைவின்றி நடைபெறு கின்றது. எங்கள் பணி விரிவடைந்தது. எனவே புது இடம் தேடினோம். அதுபற்றி விளக்கமாக முன் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் பற்றி எழுதிய பகுதியில் எழுதி உள்ளேன். எனினும் அதுபற்றி வீட்டு வசதி வாரியமும் பிறரும் செய்த செயல்கள் இரண்டொன்றினை இங்கே குறிக்கக் கடமைப் பட்டுள்ளேன்,