பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 முன் குறித்தபடி பல முட்டுப்பாட்டுக்கிடையில் 4648 8 யின் பகுதி எங்களுக்கு முறைப்படி ஒதுக்கப் பெற்ற பின்பும், அரசாங்கமும் குழுமம் தலையீடும் பொருத்தமற்றது எனச் சுட்டியபின்பும் தொல்ல்ை தீர்ந்தது என எண்ணியபோது, பச்சையப்பர் அறநிலையம் குறுக்கிட்டது. இந்த இடம் தங்களுக்கு முன்னரே ஒதுக்கப்பெற்றதெனவும் எனவே இது தங்களுக்குச் சொந்தமானதெனவும் உரிமை கொண்டாட ஆரம்பித்தது. அப்போது அறநிலையத்தின் தலைவரா யிருந்த சட்டங்களை நன்கு அறிந்து ஆண்ட ஒரு "பெரியவர் இந்த எல்லையில் ஒரு பலகையை நட்டு. அதில் "இந்த இடம் பச்சையப்பருக்கு உரியது என எழுதிவிட்டார். அப்போது வீட்டு வசதி வாரியத் தலைவரும் புதிதாக வந்திருந்தார். நான் உடனே அவரிடம் சென்று முறையிட்டு, அதை அப்புறப்படுத்தினாலன்றி நாங்கள் கட்ட வேண்டிய தவணைக்குரிய தொகையினைக் கட்டமாட்டோம் என்று திட்டமாகக் கூறி, எ ழு தி யும் கொடுத்துவந்தேன். அதற்கிடையில் அந்த அறத்தைச் சேர்ந்த சிலர்-என் மாணவர் உட்பட எனக்கு எதிராக வசைச் சொற்களை வாரி வீசினர்; பழித்தும் இழித்தும் உரைத்தனர். நான் அவர்களுக்காக இரக்கப்படுவதன்றி வேறு என்ன செய்ய இயலும்? நான் வீட்டு வசதி வாரியத்துக்கு எழுதியபடியே தவணை செலுத்தாது மேலே அமைச்சருக்கும் முதல்வருக்கும் விண்ணப்பங்கள் அனுப்பினேன். அப்போது வீட்டு வசதிச் செயலராக இருந்தவர் பச்சையப்பரில் பயின்றவர். அவர் ஆசிரியரைக் காட்டிலும் பயின்ற கல்லூரியிடம் பெருமதிப்பு வைத்தமையின் எங்களுக்கெனத் தந்த இடத்தினை எப்படி யும் எடுத்துப் பச்சையைப்பருக்குத் தர முயன்றார். பல்கலைக்கழகம் பத்து ஏக்கர் நிலமின்றேல், கல்லூரி நடத்த இசைவு தராது என்ற காரணம் காட்டி, இதையும் எடுத்துக்கொள்ள முயன்றனர். ஆயினும் முன் அவர்களுக்கு ஒதுக்கிய இடத்திற்கு ஆறு லட்சத்துக்குமேல் தவணைத்