பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 தொகை கட்டாததை அரசாங்கம் சுட்டிக் காட்டிற்று. எனினும் செயலர் அவர்கள் எப்படியும் இதை அவர்களுக்குக் கொடுக்க முயன்றார். அது பற்றிய கடிதப் போக்குவரத்து களையெல்லாம் எடுத்துக் காட்டின் அது விரிவாகும் என அஞ்சுகிறேன். - - இதற்கிடையில் பச்சையப்பர் அறநிலையத்தின் அமைப்பில் மாற்றங்கள் வந்தன. பெருஞ்செல்வர் ஒருவர் தலைமைப்பதவி ஏற்றார். அவர் இந்த நிலத்தைப் பெறாது விடுவதில்லை என்று கூறிப் பலவகைகளில் முயன்றார். அக் காலத்தில்தான் வாரியத் தலைவர் இரு முறை ஒதுக்கிய உத்தரவை ரத்து செய்து, நாங்கள் கட்டிய பெரும் தொகையினைத் திரும்பப்பெற இரசீதும் உடன் இணைத்து அனுப்பினார். எனினும் மேலுள்ளவர் தலை யீட்டால் அது நிறுத்தப்பெற்றது என்பதை மேலே சுட்டினேன். இடையில் அரசாங்கம் ஓர் ஏற்பாடு செய்தது. பச்சை யப்பர் அறநிலையத்தவரையும் எங்களையும் கூட்டிவைத்து ஏதேனும் சமரசம் செய்ய முடியுமா என்ற முயற்சியே அது. அதற்கு முன்பே, வீட்டு வசதி வாரியத் தலைவர் அலுவலகத்தே அதுபோன்ற கூட்டம் நடந்து பயனளிக்கா மல் போகவே இந்த ஏற்பாடு. அதன்படி கல்வி அமைச்சர் அறையில் கூட்டம் நடைபெற்றது. வீட்டு வசதி வாரிய அமைச்சர் அவர்களும் இருந்தனர். வாரிய உயர் அதிகாரி கள், பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உயர் அதிகாரிகள், கல்லூரிக் கல்வி இயக்குநர், கல்வி, வீட்டு வசதி துறைச் செயலர்கள், நகராண் கழகத்தவர் எனப் பல துறையினரும் அங்கே வந்திருந்தனர். பச்சையப்பர் அறநிறையத் தலைவரும் உறுப்பினர் சிலரும் வந்திருந்தனர். நாங்களும் பெற்றோர் சங்க உறுப்பினர் சிலருடன் சென்றிருந்தோம். அறை நிரம்பச் சுமார் ஐம்பது பேருக்கு மேல் கூடியிருந்தனர். காலை 10 மணிக்கு ஆரம்பித்த கூட்டம் பிற்பகல் 2.30 மணி அளவில்தான் முடிவுற்றது.