பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187 கூட்டத்தே பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் காழ்ப் பினை உடையாரும் கல்வித் துறைச் செயலரும் வேறு இரண்டொருவரும் எப்படியும் எங்களிடமிருந்து இதை வாங்கிவிட வேண்டும் என முயன்றனர். அவர்களுள் ஒருவர் பச்சையப்பர் நிறுவனத்தினர் தரவேண்டிய ஆறரை இலட்சத்தினையும் இனாமாகத் தள்ளிவிட்டு இந்த இடத் தினையும் தரலாம் என்றார். ஆயினும் அமைச்சர் அவர் கள் அவரை வன்மையாகக் கண்டித்துப் புறம்போக்கினர். கல்லூரிக் கல்வி இயக்குநர் வள்ளியம்மாள் கல்வி நிறுவனத் துக்கு இந்த இடம் தரக் கூடாது' என்றனர். 'ஏன்?" என்று அமைச்சர் கேட்க, இவர்கள் இந்தி சொல்லிக் கொடுக் கிறார்கள்; எனவே கூடாது' என்றார். அவர்களே மத்திய ஆட்சி சிலகாலம் இங்கே நிலவிய காலத்தில் அவர்தம் கொள்கையினை ஏற்று இந்தியைப் போற்றியதை அறிந்த அங்கிருந்த சிலர் நகைத்தனர். நான் அமைதியாக அம்மா, நான் செய்வதை உங்கள் ஆணை வழியே உங்கள் கல்லூரி களில் செயல்படுத்த முடியுமா?’ எனக் கேட்டேன். உடனே அவர்கள் என்ன? எப்படி?’ என்று கேட்டார்கள். . நான் அமைதியாக எங்கள் பள்ளியில் பயிலும் ஒவ்வொரு மாணவரும் தமிழைக் கட்டாயம் பயில வேண்டும் என்ற விதி உண்டு. உங்கள் கல்லூரிகளில் தமிழைக் கட்டாயம் பயில உங்களால் ஆணையிட முடியுமா? எனக் கேட்டேன். அவர்கள் முகம் கவிழ்ந்தார்கள். கல்வி அமைச்சர் 'அம்மா நீங்கள் சும்மா இருந்தாலே போதும்' என எச்சரித்தார். ஆம். அவர்கள் அதை நிச்சயமாகச் செய்ய முடியாது, மத்திய கல்வித் திட்டத்தில் மும்மொழித் திட்டம் இருப்பி னும் எந்த மொழியும் கட்டாயம் இல்லை. இந்தி, ஆங்கிலம் இரண்டையும் விடுத்து வேறு எந்த மூன்று மொழிகளையும் மாணவர் எடுத்துப் பயிலலாம். தமிழ் மாணவர் ஒருவர் தமிழ், மலையாளம், கன்னடம் என்ற மொழிகளைப் பயிலத் தடையில்லை. மூன்றாவது மொழியும் இடைநிலை வகுப்புகளிலேயே கட்டாயமாக உள்ளது. எனவே அத் திட்டப்படி ஆங்கிலம், இந்தியுடன், இரண்டாவது தமிழ்