பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 அல்லது மூன்றாவது மொழியாக கட்டாயம் பயில் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தமிழ் நாட்டில் இருமொழிக் கொள் கையில் ஆங்கிலம் கட்டாயமாக்கப் பெறுகிறது. எஞ்சிய ஒரு மொழி தமிழ் அல்லது தெலுங்கு அல்லது இந்தி அல்லது பிரஞ்சு, ஜெர்மன் என எதை வேண்டுமானாலும் கொள்ள லாம். எனவே அவர்கள் தமிழைக் கல்லூரிகளிலோ உயர் நிலைப்பள்ளிகளிலோ கட்டாயமாகப் படிக்கச் சொல்ல முடியாது. எங்கோ சென்றுவிட்டேன். மன்னியுங்கள். என் தமிழ்ப்பித்து அப்படி ஈர்த்துச் சென்றது. பச்சையப்பர் அறநிலையத்தலைவர் என்னைப் பலவகையில் அனைவர் எதிரிலும் மிரட்டினார். எங்கள் கல்லூரியில் நாங்கள் கொடுத்த சம்பளத்தை வாங்கிச் சாப்பிட்டு, எங்களுக்கே துரோகம் செய்கிறார் என்றார். அங்கே நீ பள்ளிக்கூடம் நடத்துவதைப் பார்க்கிறேன்' என்று மிரட்டினார். ஆனால் அவற்றிற்கெல்லாம் தக்க பதில் தரப்பெற்றன. என்னா, லன்று நல்லமைச்சர்களாலேயே. மற்றும் அடுத்த சில நாட்களில் பச்சையப்பர் அறநிலையக்குழுவே கலைக்கப் பெற்று, அரசாங்க நேரடி மேற்பார்வையிலேயே நடத்தப் பெறும் நிலையும் உருவாயிற்று. அன்றைய கூட்டம் பிற்பகல் முடிந்தபிறகும் எந்த முடிவினை அரசாங்கம் எடுத்தது என்பதை யாரும் சொல்ல வில்லை. என்னாகும் என்று யாருக்கும் தெரியவில்லை. எல்லாவிதமான கடிதப் போக்குவரத்துகளையும் அன்றைய 'கூட்ட நிகழ்ச்சி நடவடிக்கைகளையும் முதல்வர் அவர்களுக்கு அனுப்பியுள்ளார்கள் எனப் பின்னர் அறிய முடிந்தது. அவரும் அதை அணுகி ஆராய்ந்து-காலம் நெடிதாயினும் 1981-ம் ஆண்டின் தொடக்கத்தில் எங்களுக்குத் தந்ததை மாற்ற முடியாது என அரசாங்க ஆணை பிறப்பிக்கச் செய்தார். ஆனால் எங்களுக்குக் கொடுக்க முடியாது. என்று முயன்ற அரசாங்க அதிகாரிகளோ அறநிலையக் குழுவினர்களோ அந்த உத்தரவு வந்த காலத்தில்