பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15; அவரவர் பதவிகளில் இல்லை-அறிந்து கொள்ள. எனவே பெரும் பெரும் பதவியாளர்-செல்வர்-அதிகாரி கள் ஆகியவர்கள் எதிர்ப்புக்கிடையில் நல்லமைச்சர்முதல்வர் ஆகியோர் நேரிய வழியினால் அந்த இடத்தி னைப் பெற்ற உடன் எப்படியோ முழுத் தொகையினைக் கட்டிமுடித்தோம். அப்படியே முன் தந்த நிலங்களுக்கும் (226 CD) உரிய தொகை கட்டப்பெற்றது. அதற்குள் வீட்டுவசதி வாரியத்தலைவர் பதவி நீங்கப் பெற்றார். திரு. வேலூர் நாராயணன் என்பவர் தலைவர் பதவி ஏற்றார். அவரை அந்த ஆண்டு பொங்கல் விழாவிற் குத் தலைமையேற்கச் சொன்னோம். அந்த விழாவிலே அவர் கையினாலேயே பத்திரங்கள் வழங்கப்பெற்ற அடுத்த இரண்டொரு நாட்களில் பதிவும் செய்து கொண்டோம். பதிவுக்குரிய முத்திரைக் கட்டணத்திற்கு (Stamp Duty) அரசாங்கம் விலக்களித்து எங்களை ஊக்கிய சிறப்பினையும் இங்குச் சுட்டாமல் இருக்கமுடியாது. அவர்களுக்கு நன்றி யுடையோம். இதற்கிடையில் புதிய இடத்தில் நாங்கள் வேலியிட்டு, கிணறு எடுத்து, சுற்றிலும் தென்னங் கன்றுகளை நட்டுப் பயிராக்கினோம். அது தவறு என்று பச்சையப்பர் அறநிலையத்திலிருந்தும் அரசாங்க வீட்டு வசதித்துறை செயலரிடமிருந்தும் கடிதங்கள் வந்தன. நாங்கள் கட்டடம் கட்ட இருமுறை வரைப்படம் அனுப்பியும் வாரியம் திருப்பி அனுப்பியது. ஆயினும் அவற்றிற்கெல்லாம் மடுத்தவாயெல் லாம் பகடனன்னான்' என்ற வள்ளுவர் வாக்குப்படி, நான் பகடெனப் பாரம் சுமந்து மாற்றுப் பதில் உரைத்து வெற்றி காண முடிந்தது. அவர்கள் எங்களுக்கு மாற்று இடமாகக் காட்டிய நீர்தேங்கிய குட்டையினைக் கண்டு இறைவா! இதுவோ உன் இன்னருள்' என்று எண்ணி கலங்கியதுண்டு. ஆயினும் அனைத்தும் செம்மையாக்கப்பெற, இன்று இதில் நான்கு மாடிக் கட்டடத்து வள்ளியம்மாள் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி சிறக்க நடைபெறுவதை அனைவரும்