பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 60 உணர்வர். அதற்குப் பின்பு எங்கள் பணியும் இடையீடின்றி இனிது நடைபெற்று வருகிறது. திகைப்பு ஓரளவு நீங்கப் பெற்றுத் தெளிவும் பிறந்தது. - அண்மையில் மற்றொரு சிறு இடம் பள்ளிக்கு அருகிலேயே இருக்கின்றமையின் தக்க வகையில் பயன்படும் எனக் கருதி வீட்டு வசதி வாரியத் தலைவர் அவர்களுக்கு விண்ணப்பம் செய்தோம். அவர்களும் எங்கள் வேண்டு கோளை அன்புடன் ஏற்று உடனே செயல்முறைக்கு உரியவர் களுக்கு அனுப்பினர். அண்ணாநகர் கோட்ட உயர் அதிகாரிக்கு அனுப்பினார். அங்குள்ள ஓர் அதிகாரியின் சொந்தக்காரர் மகன் எங்கள் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந் தான். நன்கு பயிலவில்லையாதலால் தேர்ச்சி பெறவில்லை. ஒருநாள் நான் அந்தப் பக்கம் சென்றபோது, அந்த அதிகாரி என்னை மிகப் பரிவுடன் வரச் சொன்னார். அதைச் சொன்ன அவர் கீழுள்ள மற்றோர் அதிகாரியும் என் உடன் வந்தார். அவர் அறைக்குச் சென்றபின் அந்த அதிகாரி என்னை மிகவும் உபசரித்து காப்பி சாப்பிட வற்புறுத்தினார். நான் வேண்டாம் என ஒதுக்கி நின்றேன். உடனே ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அவர் உறவினர் பையன் ஆறாம் வகுப்பில் தேறவில்லை எனவும், அவன் தேறியதாகச் சான்றிதழ்தரின் அவனை வேறிடத்தில் சேர்த்துக் கொள்வ. தாகவும் சொன்னார். நான் அந்த முறையினை நாங்கள் எப்பொழுதும் கையாண்டதில்லை எனவும் இனியும் கையாள மாட்டோம் எனவும் என் சொந்தப் பெயர்த்தியே தேர்வு பெறாத போது நிறுத்தி வைக்கப்பெற்றாள் எனவும் கூறி முடியா நிலையை விளக்கினேன். ஆனால் வற்புறுத்தினார் நான் முடியாது என்று சொல்லி வெளி வந்தேன். அப்போது அவர் சொன்ன சொற்கள் என் காதில் விழுந்தன. எப்படி இந்த இடத்தை வாங்குகிறார் எனப் பார்க்கிறேன்' என்ற சொற்களே அவை. அதனாலோ அன்றி ஏனோ அந்த விண்ணப்பம் இன்னும் நிறைவேறவில்லை.