பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்சேர்க்கை பார்வையிட்டோர் கருத்துக்கள் மாண்புமிகு இரா. நெடுஞ்செழியன் நிதி அமைச்சர் வள்ளியம்மாள் கல்வி அற நிலையத்தின் சார்பாக "வள்ளியம்மாள் குழந்தைகள் பள்ளி ஒன்றிணை நிறுவி, அதனைத் திறந்து வைக்கும்படியாக என்னை அன்பர் அ. மு. பரமசிவானந்தம் அவர்கள் பணித்தமை கண்டு பேருவகை கொண்டேன். சிறுவர்-சிறுமியர்களை மிகச் சிறு வயதிலிருந்தே நல்ல முறையில் பயிற்றுவித்து, அவர் களின் பண்பு நலன்களை வளர்த்து, அவர்களுக்கான சிறந்த வாழ்க்கைக் குறிக்கோளை உயர்த்தி, அவர்களை நல்ல மாணவ-மாணவியர்களாக உருவாக்கும் சீரிய பணியினை இந்தப் பள்ளி மேற்கொண்டிருப்பது பாராட்டி மகிழ்வதற் குரியதாகும். வாழ்க இந்தப் பள்ளி!வளர்க இதன் முயற்சி! வெல்க இதன் தொண்டு!! (தொடக்க நாள்) 21.6.68 டாக்டர் மு. வரதராசனார் மதுரைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் வள்ளியம்மாள் குழந்தைகள் பள்ளியைக் கண்டு மகிழ்ந்தேன். குழந்தைகளின் அறிவு வளர்ச்சியிலும் உடல் வளர்ச்சியிலும் ஆர்வம் கொண்டு மனப்பயிற்சிக் கருவிகளும் உடற்பயிற்சிக் கருவிகளும் பல அமைத்துக் குழந்தையுள்ளம் களித்திடும் வகையில் பள்ளியை நடத்தி வருதல் பாராட்டத் தக்கது. படிப்புக்கும் விளையாட்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லாத வகையில் குழந்தைகளின் கல்வி அமையவேண்டும் என்ற உளநூலாரின் கொள்கையை இப் பள்ளியில் தெளிவ்ாகப் புலப்படுத்துகின்ற்னர். குழந்தைகளே வருங் காலத்தின் பெருஞ் செல்வம் என்ற உண்மையை உணர்ந்து பள்ளிப் பொறுப்பினர், ஷெனாய்நகர் வட்டாரத்திற்குச் சிறப்புத் தேடித் தந்துள்ளனர். அவர்களின் நன்முயற்சி வெல்க! - 28-6. 6.8