பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 நெ. து. சுந்தரவடிவேலு சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் வள்ளியம்மாள் குழந்தைகள் பள்ளியைக் கண்டு மகிழும் பேறு பெற்றேன். குழந்தைகளின் உடலும் அறிவும் வளர் வதோடு உள்ளமும் பண்படக் கூடிய வகையில் பள்ளி நடை முறைகள் அமைந்திருப்பதறிய மகிழ்கிறேன். வாழ்க இப்பள்ளி! வளர்க இதன் தொண்டு!! வளர்க சிறுவர் சிறுமியர்!!! 31.3- 1969 Swami Dakshnamurthi American To shape the minds of the children while they are yet in their most tender and impressionable stage is a task involving a serious and most vital responsibility towards our race and towards these children as individuals. I have found in Valliammal Kindergarden an atmos-phere which seems to indicate that those who are running this institution possess an attitude which is equal to this responsibility. May God bless you and guide you in this sacred task. 24-4-70 க. இராசாராம் தொழில் அமைச்சர் வள்ளியம்மாள் குழந்தைகள் பள்ளியின் மூன்றாம் ஆண்டு விழாவில் பங்குகொண்டு, பள்ளியினைக் காணும் நல்வாய்ப்பைப் பெற்றேன். பேராசிரியர் அ. மு. பரம சிவானந்தம் அவர்கள் தன்னை ஈன்ற அன்னையார் பெயரால் அமைந்த இப்பள்ளியைச் சிறப்பாக நடத்தி வருகிறார்கள். குழந்தைகள் ஊக்கமும் உற்சாகமும் உள்ள வர்களாகவும், கல்விகேள்விகளில் சிறந்தும் விளங்குவதைக்