பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171 தாமரை மணாளன் ஆசிரியர் இதயம் இந்த இளங் கல்லூரிக்குள் கிட்டத்தட்ட ஒருமணிநேரம் மட்டுமே இருக்கும் வாய்ப்புத்தான் எனக்குக் கிடைத்தது. எனினும் இந்தக் கல்லூரி எல்லைக்குள் நான் சுவாசித்த அறிவின் மூச்சு-நான் அனுபவித்த கனியின் மணம் எல்லை யற்றது. இந்தக் கல்லூரி, அதன் தலைவர் பேராசிரியர் அ. மு.ப. அவர்களால் கல்லாலும் செங்கல்லாலும் கட்டப்பட்டதாகத் தோன்றவில்லை. கனிந்த அன்பாலும் கடுமையான உழைப்பாலும் அவர்கள் இக் கல்வி நிலையத்தை வளர்த் திருக்கிறார்கள். அவர்களுடைய சீரிய எண்ணங்கள் சிறப் புற்று உயர்கவென வாழ்த்துகிறேன். 9-7-79 செல்லையா இராசதுரை இலங்கை அமைச்சர் தமிழ் அறிஞர் அண்ணா பெயரில் உள்ள நகரில் நடை பெறும் வள்ளியம்மாள் கல்லூரிக்கு இன்று வருகை தந்தது வாழ் வி ல் மறக்கவொண்ணா நிகழ்ச்சியாகிவிட்டது. குழந்தைகள் ஆர்வத்துடன் படிப்பதைக் கண்டேன். ஆசிரியர்கள் "ஏனோ தானோ" என்றில்லாமல் கடமை உணர்வுடன் உழைப்பதைக் கண்ணுற்றேன். தெய்வீக அருள் இக் கல்லூரிக்குக் கிடைக்க இறைவனைப் பிரார்த்திக் கின்றேன். - 10-9-7 9 M. M. Ismail Chief Justice, Madras High Court I was extremely happy to preside over the XII Annual Day celebrations of the Valliammal School. It is always a pleasant experience to meet the young boys and girls and breath in their atmosphere of hope, joy, growth and friendliness,