பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i?6 "...ஆங்கோர் ஏழைக்கெழுத்தறிவித்தல்' என்ற தேசிய மகாகவி பாரதியின் கனவை நனவாக்கும் தங்களைப் போன்றோர்தான் தமிழகத்தையும் தமிழர்களையும் தமிழை யும் வாழவைக்கும் பணியினைச் செய்கிறீர்கள். ஐந்து மாணவர்களுடன் தொடங்கி இன்று ஆயிரத்து ஐந்நூறு மாணவர்களுடனும் அறுபது ஆசிரியர்களுடனும் தங்கள் கல்விக் கூடம் நடைபெறுவதை அறிய மனம் மகிழுகிறது. - அதிலும் அமரர் அண்ணாவின் பெயரால் அமைந்த அண்ணாநகரில் தங்களது கல்விக்கூடம் நடைபெறுவது சாலப்பொருத்த முடையதே! - மேலும் வளர்க! தொடர்க தங்களின் கல்வித்தொண்டு! வாழ்க பல்லாண்டென வாழ்த்துக் கூறி வணங்குகிறேன். 24-4-82 மாண்புமிகு பு.ரா. கோகுலகிருஷ்ணன் தலைமை நீதிபதி, உயர்நீதி மன்றம், குஜராத் மாநிலம் பண்பிற்கும் அ ன் பி. ற் கு ம் உரிய பேராசிரியர் அ.மு. பரமசிவானந்தம் அவர்கள் நடத்தும் இக்கல்லூரி சிறப்புற்று விளங்குவதில் ஆச்சரியமில்லை. பெற்றோர்கள் இக்கல்லூரியினிடத்து காட்டுகின்ற அன்பினை இன்றைய கலை நிகழ்ச்சிகளின் மூலம் கண்டு மகிழ்ந்தேன். மாணவிகள் அமைத்துள்ள கண்காட்சி அவர்களின் அறிவினையும் ஆற்றலையும் பெரிதும் பறை சாற்றி நிற்கின்றன. ஆசிரியர் கள் ஆர்வமும் இக் கல்லூரியினை நடத்திச்செல்லும் அறங்காவலர்கள் உணர்வும் என்னை மிகவும் கவர்ந்தன. இக்கல்லூரி மேலும் வளர்ந்து கல்வித் துறைக்குப் பேருதவி யாக அமையும் என்பது உறுதி. 4-9-82 மாண்புமிகு கா. காளிமுத்து வேளாண்மைத் துறை அமைச்சர், தமிழ்நாடு. அண்ணாநகருக்கு அழகு சேர்க்கும் வகையில் அமைந் துள்ள வள்ளியம்மாள் மேல் நிலைப்பள்ளி வானத்தைத்