பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து கிற்கிறேன் 1. முன்னுரை மதலைப் பருவத்தில் சீராட்டிப் பாராட்டி வளர்த்தவள் அன்னை. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்றாள் ஒளவை. ஆம்! பிறந்த குழந்தை முதல் முதல் அறிந்து கொள்வது பெற்ற தாயைத்தானே! அத் தாய் காட்டவே பிறகு தந்தை, உற்றார், மற்றார் அனைவரை யும் மெல்லமெல்ல அறிந்து கொள்ள முடிகின்றது. தாயின்றிப் பிறப்பில்லை. எனவே தாயே ஒருவருக்கு - ஒர் உயிரின் பிற விக் கு = முதலாவதாக அமைகின்றாள். அத்தாய் தன் குழவியைப் போற்றி வளர்த்துப் பொன்னே போல் பாதுகாத்து வையத்து வாழவிடுகிறாள். அவ்வாறு வளர்க்கப் பெற்ற மகன் வளத்தால் சிறந்தால் . புகழடைந் தால் . சான்றோனாகத் திகழ்ந்தால் அவனொடு மகிழ்ந்து உயர்ந்து, தானும் உயர்ந்த உள்ள நெறியில் நின்று பெருமைப்படுகிறாள். அன்றி, அந்த மகன் தவறி நிலை கெட்டால், தானும் உளத்தால் நைந்து வாடி, நலம் கெட்டு கூடுமாயின் விரைவில் உலகை விட்டுப் போகவே தன்னைத் தயார் செய்து கொள்ளுகின்றாள். அத்தகைய அன்னையை எண்ணிப் போற்றிப் பாதுகாத்தல் ஒவ்வொருவருடைய கடமையும் பொறுப்புமாகும். ஈன்ற பொழுதில் பெரிதுவக் கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்டதாய்' என்ற உயர் நெறியில் வள்ளுவரால் போற்றப் பெறும் அந்த அன்னை, பிற அனைத்தினுக்கும் அனைவருக்கும் மேலாக வைத்து வாழ்த்தத் தக்கவளன்றோ! என்னைப் பெற்ற தாய் வள்ளியம்மாள் எங்கோ கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். நாட்டுப்புறச் சூழலிலே தி.தி-2