பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 உழன்றவள். இளமையிலே திருமணம் செய்யப் பெற்றவள். என்னை - தன் ஒரு மகனைத் தன் பதினான்காம் வயதிலே - 1914லே பெற்றெடுத்தவள். ஆம்! இந்த நூற்றாண்டுடன் 1900ல் பிறந்தவள், என் ஒருவனையே பெற்றெடுத்தாள்: வேறு உடன் பிறந்தவர் எனக் கூறிக்கொள்ள ஒருவரும் பிறக்கவும் இல்லை; பிறந்து இறக்கவும் இல்லை. என் அன்னையோடு பிறந்த பெரிய அன்னை மீனாட்சி அம்மையாருக்கும் யாதொரு மகப்பேறும் இல்லை. என் பாட்டனார் மாணிக்க முதலியார் தன் உடமை அனைத்தை யும் மூன்றாகப் பிரித்து ஒன்றை என் ஊரின் அம்பலவாணர் திருக்கோயிலுக்கும் பிற இரண்டு பகுதிகளை இரண்டு பெண் களுக்கும் தந்து மறைந்தனர். உடன் பிறந்தவர்கள் பல்வேறு சூழல்களுக்கிடையே தனித்தனியாகவே வாழ்ந்துவந்தனர். என் தந்தையாரோ என் இளம் வயதிலேயே மறைந்து விட்டார். பிறகு இரு அன்னையரும் இணைந்து வாழ்ந்த னர். அவர்களுடன் என் இளமைப் பருவத்தே, என்னைச் சீராட்டிப் பாராட்டிப் போற்றி வளர்த்த என் பாட்டியார் (அம்மாவுக்கு அத்தை) காமாட்சி அம்மையாரை நான் மறக்க முடியாது. இவர்கள் யாவரும் என்னை வளர்த்த வகையினையும் என் பள்ளி இறுதி வகுப்பு வரையில் என்னைப் பாதுகர்த்த சிறப்பினையும் என் இளமையின் நினைவுகள்' என்ற நூலில் விளக்கி எழுதியுள்ளேன். பள்ளியிறுதி வகுப்பிற்குப் பிறகு, தனியாகப் புலவர் வகுப்பில் பயின்று வெற்றி பெற்றுக் காஞ்சியில் (ஆந்திரசன் பள்ளியில்) ஆசிரியனாகப் பணியாற்றியபொழுது தான், என் வாழ்வைத் தம் வாழ்வாக எண்ணிய அன்னையர் இருவரும் ஒருவர் பின் ஒருவராக 1941-ல் மறைந்தனர். அவர்கள் வழி இருமணம் புரிந்து என்னுடன் என்றும் வாழ்ந்தவரும் விலகி நின்றவருமாகிய இரு மனைவியரும் இன்று உலகில் இல்லை. எனவே நான் இன்று என் முன்னோர், வாழ்க்கைத் துணை ஆகிய ஒரு பற்றுமற்றுத் தனியனாக வாழ்ந்து வருகிறேன், நான் எட்டு ஆண்டுகள் காஞ்சியில் வாழ்ந்த வகையினை