பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 9 எல்லாம் 'காஞ்சி வாழ்க்கை' என்னும் நூலில் குறித் துள்ளேன். - என்னைப் போற்றி வளர்த்த அன்னையின் சிறப்பினை யெல்லாம் வெள்ளம் விடுதூது என்று நான் 1938-ல் எழுதிய என் சிற்றிலக்கியத்தில் தெளிவாகக் காட்டியுள்ளேன். ஐந்து பெரு குரவராகி நின்று - தாயாய் தந்தையாய் . குருவாய் - வழிகாட்டியாய் - தெய்வமாய் நின்ற அன்னை யின் பெயரை உலகில் எப்படியாயினும் நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்திலே ஒரு கால் நூற்றாண்டு கழிந்தது. சென்னைப் பச்சையப்பர் கல்லூரியில் முப்பதாண்டு களுக்கு மேலாகப் பணிபுரிந்த நாட்களிலெல்லாம் என் அன்னையைப் பற்றிய எண்ணம் என் உள்ளத்தில் நிழலாடிக் கொண்டே இருந்தது. இடையில் ஒராண்டு என்னைத் தமிழக அரசாங்கத்தார் ஐதராபாத் உஸ்மானியப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறை தலைவர் பதவி ஏற்றுப் பணி செய்ய ஆணையிட, அப்பணி வழியே தலை நின்று பச்சையப்பரை விட்டு ஒராண்டு பிரிந்து நின்றேன். 1967-ல் திரும்பி வந்தபொழுது, என் அன்னையைப் பற்றிய எண்ணம் மேலோங்கி நின்றது. ஐதராபாத்தில் கண்ட பல நிலையங்களும், அது போது அடிக்கடி தில்லி, ஆக்ரா, அலிகார், காசி முதலிய இடங்களுக்குச் சென்ற போது ஆங்காங்கே கண்ட அறச்சாலைகளும் கல்வி நிலையங்களும் என் எண்ணத்துக்கு உரமூட்டின. எனவே 1967-ல் எண்ணம் திண்ணிதாக உரம்பெற, 1968 சூன் திங்களில் வள்ளியம்மாள் கல்வி அறத்தை நிறுவத்துணிந்து - நிறுவி, சிறிய அளவிலே வீட்டிலேயே பள்ளியினைத் தொடங்கலானேன். - இ ப் ப ள் எளி த் தொடக்கத்துக்குக் காரணமாயமைந்த மற்றொருவர் - இன்று பள்ளியின் முதல்வராக உள்ளவரைப் பற்றியும் ஈண்டு குறிக்கக் கடமைப்பட்டுள்ளேன். தமிழ் எம். ஏ. தனித்த முறையில் பயிலுவதற்கெனவும், அப்பாடங்