பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 களில் சில ஐயங்களைத் தெளிந்து கொள்வதற்கெனவும் எனை நாடி வந்த திருமதி. சண்பகம் அவர்கள் எம். ஏ" முடித்து ஆசிரியர் பயிற்சியினையும் (பி. இட்) அடுத்த ஆண்டு முடித்தார்கள். நான் அப்போது பச்சையப்பரில் பணிபுரிந்த காரணத்தாலும், என் மகன் மெய்கண்டான் மாணவராக இருந்தமையாலும் முழுப் பொறுப்பில் பள்ளியைப் பார்வையிட வேண்டிய நிலை உள்ளதாலும், தக்க ஒருவரை நாடிக் கொண்டிருந்த வேளையில் இவர்கள் அப்பொறுப்பைக் குறைந்த சம்பளத்தில் ஏற்றுக் கொள்ள வந்ததை குறிக்காமல் இருக்க முடியாது. அவர்தம் ஆசிரியர் பயிற்சி முடித்ததும் 1968-ல் இப்பள்ளியினைத் தொடங்க முடிவு செய்தேன். இடையில் நான் பெற்றெடுத்த மக்கள் மூவருக்கும் மண முதலிய வாழ்க்கை நெறிகளை ஒழுங்குபடுத்தி அவரவர் களுக்கு ஏற்ற வகையில் வருவாய் வரத்தக்க முறையில் தனித்தனி வீடுகளைக் கட்டித் தந்ததோடு, மகன் மெய்கண்டானிடம் முன்னோருடைய நிலன்களைபும் பிற வற்றையும் ஒப்படைத்துவிட்டேன். எனவே என் மக்களுக்கு உரிய பணிகளை முறைப்படி செய்து முடித்த மகிழ்ச்சியில் என்னை மகனாய்ப் பெற்ற அன்னையின் பெயரில் ஆக்கப் பணிபுரிய முழுநேர ஊழியனாக என்னை உரிமையாக்கிக் கொள்ள முடிந்தது. எனவே கல்வி அறத்தை அமைத்தும் பள்ளிக்கென ஆட்சிக் குழுவினைப் பதிவு செய்தும் முறை யாகக் கல்விப் பணியினை ஆரம்பித்து வளர்க்கத் தொடங் கினேன். அன்று தொட்டு இன்று வரையில் அனைவரும் கண்டு மகிழ்ந்து வாழ்த்தும் வகையில் வள்ளியம்மாள் கல்விப் பணி வளர்ந்து கொண்டே வருகின்றது. 1968-ல் 5 பிள்ளைகளோடும் மூன்று ஆசிரியர்களோடும் தொடங்கப்பெற்ற இந்த அறத்துறையின் பள்ளிகளில். இன்று மூன்று பள்ளிகளில் - இரண்டாயிரம் மாணவர்களுக்கு மேலாக, எண்பதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களின் கீழ், பயிலும் நிலையினைக் கண்டு நிற்கின்றேன். இடையிலே பல இலட்சக்