பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 கணக்கில் மனைகள் வாங்கப்பெற்று . கட்டடங்கள் கட்டப் பெற்றுள்ளமையை அனைவரும் அறிவர். ஆக, இந்தப் பதினெட்டு ஆண்டுகளில் வள்ளியம்மாள் கல்வி அறம் வளர்ந்த நிலையினை எண்ணித் திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து கிற்கிறேன். பதினெட்டு மக்கள் வாழ்வில் ஒரு திருப்பு மைய ம்ாகும். இளமையோடு கலந்த பள்ளிப் படிப்பை முடித்து, மாணவப்பருவம் தாண்டி, முழுமனிதனாகும் (Major) வயது பதினெட்டு அன்றோ. அதற்கு முன் குழவிப் பருவத்திலும் இளமையிலும் எத்தனையோ இடர்கள் - இடர்ப்பாடுகள் - தொல்லைகள் . துயரங்கள் பலவற்றை ஏற்று, எதிர்த்துப் போரிட்டு வென்று, வளர்ச்சியுற்ற நில்ைகள் ஒவ்வொருவர் வாழ்விலும் காணக்கூடியதே. இப்பள்ளியின் கடந்த பதினெட்டு ஆண்டுகளிலும் அத்தகைய இடர்கள் - இன்னல் கள் பல இடைப்பட்டன. எனினும் இறையருளாலும் அன்னையின் அருளாலும் நல்லவர் தம் உறுதுணையாலும் யாவும் நீங்க இன்று முழுமனித நிலையில் இக்கல்வி அறம் நிமிர்ந்து நிற்கிறது. (அவைபற்றியெல்லாம் நூலுள் குறித்துள்ளேன்.) பதினெட்டு அறத்துக்கும் மறத்துக்கும் போராட்டக் காலமாகி, அறம் வெல்லும் எல்லையாகவும் அமைகின்றது. இளங்கோவடிகள் இந்த உண்மையினை நன்கு விளக்கு கிறார். சேரன் செங்குட்டுவன் கங்கைக் கரையில் கனக விசயரைப் பதினெட்டு நாழிகையில் வென்றான் எனக் கூற நினைத்தவர், 'யாண்டும் மதியும் நாளும் கடிகையும் ஈண்டுநீர் ஞாலம் கூட்டி எண்கொள' பதினெட்டு நாழிகையில் வென்றான் என்கிறார். தேவாசுர யுத்தம் பதினெட்டு ஆண்டுகளிலும் இராம இராவண யுத்தம் பதினெட்டு மாதங்களிலும் பாரத புத்தம் பதினெட்டு நாட்களிலும் செங்குட்டுவன் கனகவிசயர்