பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 யுத்தம் பதினெட்டு நாழிகையிலும் முடிவுற்றது என்கிறார். ஆம்! இங்கே நானும் பதினெட்டு ஆண்டுகள் பல இன்னல் க்ளுக்கு உட்பட்டு, உழன்று, உழைத்து, நல்லவர் உதவி யொடு இன்று இதோ உங்கள் முன் இந்த நூலினைப் பத் தொன்பதாம் ஆண்டில் வைத்து வணங்குகிறேன். இந்த அறத்தினைத் தொடங்கும்போது இவ்வளவு பெரிதாக, இந்தக் குறைந்த காலத்தில் இது வளரும் என்று நான் நினைக்கவில்லை. ஏன்? - யாருமே நினைத்திருக்க மாட்டீர்கள். நாங்கள் எப்போதும் தேர்வின் அடிப்படை யிலே தக்க மாணவர்களை மட்டும் சேர்த்துக் கொள்ளும் கடப்பாடு இல்லையானால் நாலாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் இதில் சேர்ந்திருப்பார்கள். எனினும் தகுதி கருதி அனைத்தும் அமைக்கின்ற இந்த முறை எங்களுக்கு மட்டுமன்றி, உலகறிந்த அனைவருக்குமே ஏற்றதே என்பது நன்கு தெளிவாகின்றது. இந்தப் பதினெட்டு ஆண்டுகளில் எங்களைப் பலவகையில் கைதுக்கிவிட்டு, தேவையாயின் அறவுரைகூறி, வேண்டிய வகைகளிலெல்லாம் உதவி செய்த அறிஞர்கள் . ஆன்றோர்கள் - சான்றோர்கள் - ஆ ட் சி ப் பொறுப்பாளர்கள் ஆகிய அனைவருக்கும் நாங்கள் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம், சில சான்றோர்கள் அந்தத் தொடக்க ஆண்டுகளிலேயே எங்கள் பள்ளியினைக் கண்டு வாழ்த்தி, தம் நற்கருத்துக்களை எழுத்திலும் பொறித்துள்ளனர். (அவற்றுள் சில பின் இணைப்பில் உள்ளன) அதே வேளையில் எங்கள் வளர்ச்சியினைக் கண்டு பொருமை உளத்தோடு மறைமுகமாகவும் சில சமயங்களில் நேரிடையாகவும் தொல்லை கொடுக்கின்ற 'நல்லவர்களும்’ இல்லாமல் இல்லை. அவர்களையும் நாங்கள் குறை கூறப் போவதில்லை. எண்ணிப் பார்ப்பின் சுடச்சுடரும் பொன் போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவற்கு" என்ற வள்ளுவர் வாக்கின்படி, எங்கள் தொண்டு அவர்தம் இடிையீட்டால் குறையாது ஓங்கித்தான் வருகிறது. எனவே 'சிவநேயம் தந்த சூலையே உனக்கு வணக்கம்' என்று