பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 தன்னை வாழ்விக்க வழிகாட்டியாக அமைந்த நோய்க்கு வணக்கம் செலுத்திய திருநாவுக்கரசரைப் போன்று நாங்களும் அவர்களுக்கு வணக்கம் செலுத்தி, எங்கள் கடமை வழிச் செயலாற்றி முன்னேற்றங் கண்டு வருகிறோம். தொடக்க நாளில் நான் நின்று நின்று நினைத்தேன்நெடிது நினைத்தேன். ஒரு பள்ளிக்கூடம் தொடங்குவ தென்பது அவ்வளவு எளிதல்லவே! தொடங்கினாலும் அதற்கெனப் போதிய இடம், கட்டடம் முதலிய அமைக்கப் போதிய நிதி வசதி தேவையாயிற்றே எனச் சிந்தித்தேன், இந்தச் சிந்தனையில் உறங்காது கழிந்த இரவுகள் பல. பல நாட்கள் இறைவரிடத்தும், அன்னையிடத்தும் முறை யிட்டேன். மறைந்த என் அன்னையார், இவ்வாறு செய் வதறியாது, திகைத்தால் தேற்ற வேண்டாவோ என்று முறையீடு செய்து கொள்ளும் காலத்திலெல்லாம் கனவிடைத் தோன்றி வழி காட்டி, ஆற்றுப் படுத்துவார்கள். நான் சென்னைக்கு வந்ததும், பிற சிறப்புக்கள் பெற்றதும் மற்ற அனைத்தும் இறைவனும் அன்னையும் தந்தவைகளே எனக் கொள்ளுகின்றவன் நான். அப்படியே இன்னல்கள் வந்துற்ற போதும் அவைகளும் அவர்கள் தந்தவை எனவும் அடுத்து வரும் ஆக்கப்பணிக்கு இவை அ டி த் த ள ங் க ளாக அமைகின்றவையே எனவும் கொள்ளுகின்றவன் நான். இந்த அடிப்படையிலேயே துன்பப் பீடம் இன்பக் கோயில்' என்ற பாடல்களைப் பல ஆண்டுகளுக்கு முன் எழுதி யுள்ளேன். அறிவு அறிந்த அந்த நாள் தொட்டு இன்று வரையில் இந்த உண்மை என் வாழ்வைப் பொறுத்தவரை யில் முற்றிலும் சரியாகவே அமைந்து வருகின்றது. எனவே இந்த ஆக்கப் பணிக்கும் அன்னையும் ஆண்டவனும் தொடங்கும் வழி அமைத்துத் தந்தார்கள். வீட்டில் பள்ளி தொடங்கியதோடு அமைந்திருக்கலாம். ஆயினும் இறையருள் அண்ணாநகரில் இப்பள்ளியினைத் தொடங்க வழி காட்டிற்று. அமைந்தகரையில் ஓரிடத்துள்ள என் நிலத்தை வீட்டு வசதி வாரியத்தார் (அன்று C.I.T.) 1. கவிதையுள்ளம்-பக்85