பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 எடுத்துக் கொண்டதற்குப் பதிலாக 178 எண்ணுள்ள இரண்டு மனை அளவுள்ள நிலத்தை எனக்கு அளித்தனர். 'சமூக நலக்கூடம் - கடைகள் முதலியன அமைப்பதற்கென ஒதுக்கிய பகுதிக்கு அடுத்தே என் நிலம் அமைந்திருந்ததை நான் நினைத்தபோது, இது எதிர் காலத்தில் ஏதோ ஒரு பெருவளர்ச்சிக்கு அறிகுறி என உணர்ந்து கொண்டேன். முதலில் அந்த எனக்கென ஒதுக்கப் பெற்ற அந்த இருமனை (2 grounds) இடத்திலேயே கட்டடத்தைக் கட்ட 1969ல் தொடங்கி அடித்தளம் மட்டும் அமைத்தேன். அதற்குப் பொருள் வருவாய்க்கு என் செய்வதென்று ஏங்கித் தவித்த நாட்கள் பலப்பல. எனக்கு அப்போது வயது ஐம்பத்தைந்து ஆனமையின், என் உயிர்ஒப்பந்தத்திலிருந்து சுமார் 25,000மும் தெய்வீக நிதியிலிருந்து (T.P.F) 15,000க்கு மேலும் நான் அந்த ஆண்டில் (1969) பெற முடிந்தது. மேலும் சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றில் கண்டறி யாத வகையில், எனது நூல் ஒன்று தொடர்ந்து இரு ஆண்டு கள் பாட நூலாக அமைய, அதிலிருந்து வந்த வருவாயும் கூடிற்று. மற்றும் ஊரில் சில நிலங்களை விற்று வந்த தொகையும் என் அமைந்தகரை நிலத்துக்கு என விற்று வந்த தொகையும் உதவின. மேலும் வங்கியிடத்தும் தனியாரிடத்தும் பெருந்தொகையும் சிறு தொகையும் கடன் கள் வாங்கி எப்படியோ இந்த முதல் கட்டடத்தை மூன்று ஆண்டுகளில் கட்டி முடித்தேன். 1969ல் அடித்தளத்தையும் 1971ல் முதல் இரண்டாம் மாடிகளையும் கட்டிமுடித் தேன். என்றாலும் இன்று நினைத்தாலும் அந்த வளர்ச்சி யும் செயலும் எனக்குத் திகைப்பையே ஊட்டுகின்றன. கட்டடம் கட்டும் துறை எனக்குப் புதியது அன்று. என்றாலும், R.C' என அமைக்கப்பெறும் இன்றைய கட்டட அமைப்பு எனக்குப் புதியதே. மேலும் அதற்கேற்ற சாமான் கள் என்னிடம் இல்லை. எனவே எல்லாச் சாமான்களும் உட்பட ஒப்பந்தக்காரரிடம் கட்டட வேலையினை ஒப்படைத்தேன். அவர்கள் நல்லவர்களேயாயினும் ஒப்பந்த மரபில் எங்கோ ஒளிந்து கிடக்கும் சில குறைபாடுகளால்