பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 என் மன நிறைவுக்கு ஏற்றபடி அக் கட்டடம் அமைய வில்லை. கட்டடத் தரம், பலம், திண்மை முதலிய குறையாத வகையில் எப்போதும் நான் அருகிலேயே இருந்து கண்டு கொண்டு வந்தாலும், முழுக்கமுழுக்க நாமே கட்டுவது போன்ற மன நிறைவு எனக்கு ஏற்படவில்லை. எனவேதான் அடுத்து அமைத்த கட்டடங்களையெல்லாம் தொழில் ஒப்பந்த (Labour Contract) அடிப்படையில் தேவையான பொருள்கள் அனைத்தையும் நானே கொடுத்துக் கட்டி முடித்தேன். எனினும் ஒவ்வொரு சமயத்திலும் சிமிட்டி, இரும்பு, ஜல்லி, கல், மணல், கூலியாள் பிற பொருள்கள் பெற நான் பட்ட கஷ்டங்கள் பலப்பல. ஆயினும் அவ்வப் போது உற்ற நண்பர்களும் பிறரும் பள்ளியின் பால் அன்புற்ற அரசாங்க அதிகாரிகளும் பெற்றோரும் உதவிய காரணத்தில் எதிர் பார்த்த அளவிலும் சீராகக் கட்டடங்கள் . நிறைவுற்று வளர்ந்தன. முதல் கட்டட அடித்தளம் முடிக்கப் பெற்றபின் அப்பொழுதே - 1969லேயே சிலர் அண்ணா நகரில் பள்ளியினைத் தொடங்க வேண்டும் என வற்புறுத் தின்ர். ஆனால் கட்டடம் முற்றுப் பெறாத நிலையில் குழந்தைகளை உள்ளிருத்தி, வகுப்புகளைத் தொடங்குவ தென்பது அவ்வளவு பொருத்தமாகாது எனத் தெரிந்த காரணத்தால் அப்போதே தொடங்க முடியாது நின்ற நிலையினை உணர்த்தினேன். எனினும் பலர் வேண்டு கோளும் விருப்பமும் நல்லெண்ணமும் அமைந்த காரணத் தாலே, அவர்தம் விழைவின்படி 1969 அக்டோபரில் விசயதசமி நல்ல நாளில் குழந்தைகள் வகுப்பினைத் (I.K.G) தொடங்கினேன். பத்துப்பன்னிரண்டு குழந்தைகளுடனும் ஒரு ஆசிரியருடனும் I.K.G தொடங்கப்பெற்ற அப்பள்ளி 1970 சூனில் 5ம் வகுப்பு முடிய ஏழு வகுப்புகளோடு பதினைந்துக்கு மேற்பட்ட ஆசிரியர்களுடன் முழுப்பள்ளி யாகச் செயலாற்றத் தொடங்கியது. பள்ளியைத் தொடங்கும் போது, அதை எந்த வகையில் எந்த முறையின் எந்த அடிப்படையில் அமைக்க வேண்டும்