பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 என்ற எண்ணமே இல்லை. யாருமே அது பற்றி நினைக் கவும் இல்லை. எனினும் 1971ல் ஆறாம் வகுப்பினைத் தொடங்கும் போதுதான் இதனை எந்த முறையில். அமைப்பது என்ற எண்ணம் தோன்றிற்று. எட்டாம் வகுப்பு முடிவதற்குள் ஏதேனும் ஒரு முறையினைப் பின்பற்றி, அதற்குரிய இசைவினையும் தக்க வழியில் பெற்றாலன்றி மேல் வகுப்புகள் நடத்துவது இயலாத ஒன்றல்லவா! ஒரு சிலர் எவ்வித இணைப்புமின்றி ஐந்தாம் வகுப்புடன் பள்ளி அமைத்து, தக்க வருவாயும் பெற்று, ஐந்தாம் வகுப்பு முடிந்தவுடன் பிள்ளைகளை வேறு இடங்களுக்கு அனுப்பும் முறை இன்று நாடெங்கினும் . சிறப்பாகச் சென்னை நகரிலும் காணுகின்ற முறை என்பதை யாவரும் அறிவர்: சிலர் அந்த முறையினை இரண்டிடத்தும் (செனாய்நகர்அண்ணாநகர்) பின்பற்றினால் எனக்கு நிறைய வருவாய் பெருகும் எனவும் பரிந்துரைத்தனர். எனினும் அன்னையின் பெயரால் நிலைத்த பணிபுரியும் திட உளத்தோடு செயல் புரிந்த எனக்கு அவர்கள் அறிவுரை ஏற்றதாகப் படவில்லை எனவே நிலைத்த அங்கீகாரம் பெறவேண்டிய வழித்துறை களையெல்லாம் ஆராய்ந்தேன். முதலாவதாக, தமிழகத்தில் முறைப்படி இயங்கும் பள்ளி யாக அமைக்க நினைத்தேன். அப்படியே முன் ஒரு முறை நினைத்து அமைத்து வளர்த்து ஒரு பள்ளியினை - திரு.வி.க. உயர்நிலைப்பள்ளியினை உருவாக்கி விட்டுள்ளேன். அதற்கு முன் வாலாஜாபாத் மேல்நிலைப்பள்ளியைச் செயலாளனாக இருந்து உருவாக்கினேன். இன்று அமைப்பதற்கு இக்கால நிலைக்கு ஏற்ப முன் பணமாகப் பெருந்தொகையும் பரந்த நிலப்பரப்பும் முதலில் தேவை. தனியனாகிய என்னால் அவற்றை எவ்வாறு செய்ய முடியும்? வாலாஜாபாத் பள்ளி, திரு.வி.க. பள்ளி ஆகியவை தொடங்கிய காலத்தில் இந்த வகையில் பெற்ற இடர்ப்பாடுகளை நினைந்தேன். வாலாஜாபாத் பள்ளிக்கு பேரறிஞர் அண்ணாவே முன்வந்து (1947) இருநாடகங்கள் நடத்தித் தந்தனர். அவ்வூர் பஞ்சாயத்துத் தலைவர் திரு. தேவராசன் உடன் உதவி