பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 புரிந்தார். பின் திரு.வி.க. பள்ளிக்கு டாக்டர் சுந்தரவதனம், மு.வ. போன்றவர்கள் உடன்துணையும் நகராண்கழகத் தார் - சிறப்பாக அந்தநாள் தலைமைப் பொறியாளர் திரு. மீரான் அவர்கள் - இனாமாக அளித்த நில உதவியும் இடர்பாடுகளை நீக்கி, பள்ளியை அமைக்க உதவின. இது தனிப்பட்ட முறையில் என் அன்னையின் பெயரால் நானே முன்னின்று நடத்துவதனாலும் நான் சாதாரணத் தமிழாசிரியன் ஆனதாலும் அந்த வகையில் எனக்கு யார் உதவக்கூடும்? எனவே அந்த எண்ணத்தைக் கைவிட்டுப் பல்கலைக்கழக உதவியை நாடினேன். சென்னைப் பல்கலைக் கழகம் அன்று மெட்ரிகுலேஷன்" என்ற ஆங்கில அமைப்பில் அமைந்த கல்வி முறையினைக் கைக்கொண்டிருந்தது. (இன்று அது அரசாங்கக் கல்வித் துறையில் நேர் அமைப்பில் இயங்குகிறது) அந்த அமைப்பில் இணைத்து எப்படியும் நல்ல வகையில் செயலாற்றலாம் என்ற முயற்சியில் ஈடுபட்டேன். எனினும் எனக்கு உதவுப வரோ கைகொடுப்பவரோ பல்கலைக்கழகத்தில் ஒருவரும் இல்லையாதலால் அந்த முயற்சி கைகூடவில்லை. சாதாரண உயர்நிலைப்பள்ளியினை அமைப்பதைக் காட்டிலும் மிகக் கடினமான சில கட்டுப்பாடுகளையும் திட்டங்களையும் எடுத்துக் கூறினர். (ஆயினும் வேறு சில பள்ளிகள் மிக எளிய முறையில் இக்கட்டுப்பாடுகள் நிறைவுறா வகையில் செயலாற்றி வந்ததையும் அவர்கள் அறிவர்) எனவே அந்த முயற்சியினையும் நான் கைக் கொள்ள இயலாது எனக் கை விட்டேன். ஆனால் இன்று அதே துறையில் ஒரு மேல்நிலைப்பள்ளி செயல்பட வாய்ப்பளித்த இன்றைய அரசினையும் கல்வித் துறையினையும் பாராட்டக் கடமைப் பட்டுள்ளேன். - - அந்த நாளில் தில்லியிலிருந்து இரு வேறுதாபனங்கள் இந்தியா முழுவதும் கல்விக் கூடங்களை இணைந்து செயற் படும் நிலை நாட்டில் வளர்ந்து வருவதை அறிந்தேன். இரண்டில் ஒன்றினைப் பற்றினால் அன்னையில் பெயரா.