பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 அமைக்கப்பெறும் பணி நிறைவேறும் என்ற உணர்வும் அன்னையார் உள்ளிருந்து ஊக்கும் செயலும் ஒருங்கிணைந் தன. தில்லியிலுள்ள இருவேறு தாபனங்களுடன் தொடர்பு கொண்டேன். இருவரும் என் வேண்டுகேளுக்குச் செவி சாய்த்து ஆ வ ன உதவுவதாகச் சொன்னார்கள். திரு. பர்ரோ என்பவர் l. S. C என்ற நிறுவனத்தோடு இணைப்பதற்காக ஆக்கக் கூறுகளை விளக்கிக் கடிதம் எழுதி என்னை ஊக்கினர். அதே வேளையில் தில்லி மத்திய கல்விக் ©(pool #505 figh (Central Board of Secondary Education) விண்ணப்பத்தாள் முதலியனவும் வேறு விளக்கங்களும் அனுப்பப்பெற்றன. அத்துடன் அக் குழவின் பின்னைய தலைவரும் அன்றைய செயலாளருமாகிய திரு. சிங்கேல் (Dr. Singhal) அவர்களும் இப்பிராந்திய மத்திய கல்வி நிலைய மேற்பார்வையாளரும் பள்ளிக்கு நேரில் வந்து நடைமுறை யினைப் பார்வையிட்டு, பள்ளியின் வளர்ச்சிக்கும் ஆக்கப் பணிக்கும் வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்வதாகக் கூறினர். எனவே அந்த ஆண்டே (1972) நாங்கள் அவர்கள் குழுவிற்கு விண்ணப்பம் செய்தோம். அதற்கு முன் நாங்கள் (பள்ளி பதிவு செய்யப்பெற்றது) இதனோடு இணைவதால் மக்கள் பயன் பெறுவார்கள் எனத் தீர எண்ணியே முடிவு செய்தோம். இது மத்திய அரசாங்கத்தோடு இணைந்த ஒன்றானமையினானும் மும்மொழித்திட்ட அடிப்படையில் அமைவதானமையிலும், அரசாங்க அலுவலர் தம் பிள்ளை கள், பெற்றோர் மாறி மாறி இடம் பெறும் போது, பயிலச் செளகரியமாக இருக்கும் என்றமையினாலும் அந்தக் காலத்தில் பயின்ற (1973) நானுற்றுக்கு மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் இந்தக் கல்வி முறை யினையே விழைந்தமையாலும் நாங்களும் இதையே தேர்ந்தெடுத்தோம். இதன் பாடத் திட்டங்களும் மொழித் திட்டமும் பிள்ளைகளுக்குச் சற்று அதிகமாகவே-கடின மாகவே அமைகின்றதெனினும் பொது மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கோடு ஆரம்பித்த பள்ளியான தால், அப்பெருமக்கள் விருப்பப்படியே மத்திய கல்விக்