பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 குழுவில் இணைவதென்ற முடிவினைச் செயல் படுத்தத் தொடங்கினோம். எனினும் 1972ல் எங்களுக்கு எட்டாம் வகுப்பும் மேல் வகுப்பும் இல்லாத காரணத்தாலேயும் போது மான அறைகளும் அரங்கும் ஆய்வுகளங்களும் நூல் நிலையமும் இல்லாத காரணத்தினாலேயும் அந்த ஆண்டு எங்களுக்கு இசைவுதரப்பெறவில்லை. பின்பே 178 ல் மேல் இரண்டு மாடிகளையும் கட்டி முடித்தோம். இதற்குள் எங்கள் வளர்ச்சியினைக் க ண்ட வீட்டு வசதிவாரியத்தார் தாமாகவே முன்வந்து, பக்கத்தில் கடைகளுக்கு ஒதுக்கிய மனையினை எங்களுக்குத் தந்து (உரிய விலையில் நிறைந்த தவணையில்) கடைகளை எதிர்ப்பக்கத்தில் அமைக்கத் திட்டமிட்டனர். (அந்தத் திட்டத்தின் அடிப்படையிலேயே இன்றைய சிந்தாமணி பின்னர் உருவாயிற்று) கூடிய இடமும் பெற்று (சுமார் ஒரு ஏக்கர்) மூன்று மாடிக் கட்டடங்களும் முடிவுற்று நின்றதோடு, ஒன்பதாம் வகுப்பும் தொடங்கப் பெற்றதால் 1974ல் மறுபடியும் இணைப்புக்கு மத்திய கல்விக் குழுவை அணுகி வேண்டினோம். அவர்களும் முறைப்படி தக்கதொரு ஆய்வுக் குழுவை அனுப்பி, பள்ளியின் தேவைகள் நடை முறைகள் ஆகியவற்றையும் பொருள் நிலை முதலியவற்றையும் பிறவற்றையும் பார்வையிட்டு, இசைவுதரலாம் எனப் பரிந்துரைத்தனர். எனவே மத்திய கல்விக்குழு தன் 5-10-74 நாளிட்ட ஆணைவழி இசைவுதர, அன்று தொட்டு அந்த அடிப்படையிலே எங்கள் பள்ளி முறை யாக இயங்கி வருவதோடு அடுத்து வந்த சில மத்திய கல்வி குழுக்களும் எங்கள் வளர்ச்சியினை வாழ்த்த, அவர்தம் வாழ்த்தின் பலத்தாலும் பெற்றோர் உறுதுணையாலும் நல்லவர்தம் உடன் துணையாலும் +2, என்ற வகுப்பினை யும் தொடங்கி நாளும் வளர்ந்து வருகின்றோம். மத்திய கல்விக் குழுவின் கீழ் மும்மொழித் திட்டத் தினைச் செயல் படுத்தத் தொடங்கினோம். அதனால் எப்போதும் இன்றேனும் முன்பெல்லால் சில சில சமயங்களில் மாநில அரசின் சில அலுவலர்தம் நச்சரிப்பிற்கும் தொல்லைக்கும் நாங்கள் உட்பட்டோம். சில பற்றிப்