பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பின்னே விளக்கமாக எழுத இருக்கிறேன். ஒன்றை மட்டும் இங்கே சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். நாங்கள். செயல்படுகின்ற அந்த வேளையில் ஒருமுறை எங்கள் தொண்டினைப் பாராட்டி டாக்டர் மு. வ. அவர்கள் உடன் ஒரு சம்பவத்தையும் சொன்னார். அவர்கள் மதுரைப் பல்கலைக்கழகத் துணை வேந்தராக இருந்தபோது, ஒரு முறை முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணநிதி அவர் களைக் காணச் சென்றாராம். பல்வேறு பொருள்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது என்னைப் பற்றிய பேச்சு இடையில் வந்ததுபோலும். முன்னாள் முதல்வர் அவர்கள், என்னைச் சுட்டி அவர் தமிழாசிரியராய் இருந்து கொண்டு இந்தியை வளர்க்கிறாரே. இது தகுமா?’ என்று மு. வ. அவர்களைக் கேட்டாராம். ஆனால் மு. வ. அவர் கள் உடன் தக்க பதில் சொன்னாராம். அவர் தமிழக்குச் செய்யும் வகையில் உங்களாலோ உங்கள் அரசாங்கத் தாலோ செய்ய முடியாது’ என்றாராம், எப்படி என்ற கேள்விக்கும் உடன் பதில் சொல்ல முதல்வர் அப்படியா! நல்லதுதான்' என்றாராம். அவர் சொன்ன பதில் இதுதான் வள்ளியம்மாள் பள்ளியில் பயிலும் மாணவர் அத்தனை பேரும் இந்தியைப் படிக்கிறார்கள் என்பது உண்மைதான், ஆனால் அங்கே பயில்கின்றவர்கள் அத்தனை பேரும்.பல தமிழர் அல்லாதவர் உட்பட-தமிழைக் கட்டாயம் பயில வேண்டும் என்ற விதி உண்டு. சில மத்திய கல்வி நிலையங் களில் தமிழே மொழிப் பாடமாகக் கற்க விரும்பினாலும் கற்க முடியாது; வசதி இல்லை. மும்மொழித் திட்டம் செயலில் இருப்பினும் தமிழ் இல்லாத வேறு மூன்று மொழி களைத் கட்டாயம் பயில்கின்றார்கள். இதுவும் எந்த மாநிலத்திலோ நடைபெறுகின்றன செயல் என்று நினைக்க வேண்டாம், நம் சொந்தத் தமிழ் மண்ணில்தான் இவ்வாறு நடக்கிறது. இந்த மாநிலத்தில் முதல்வராக உள்ள நீங்கள் அத்தகைய மத்திய கல்வி நிலையங்களில் தமிழை பிற மொழிகளோடு ஒரு மொழியாகவாவது வைக்க வேண்டும் என மத்திய அரசாங்கத்தோடு வாதிட்டு வெற்றி பெற்றுச்