பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 செயல் பட முடியுமா? அது இல்லாவிட்டால் போகிறது. உங்கள் மாநிலத்தில் உங்கள் ஆணையின கீழ்ப்பட்ட பள்ளி களிலும் கல்லூரிகளிலும் பயில்கின்ற அனைவரையும் தமிழைக் கட்டாயமாகப் பயில வேண்டும் என்று நீங்கள் சட்டம் செய்ய முடியுமா? முடியவில்லையே. தமிழ் பெயருக்கு கல்லூரிகளிலும் ப்ள்ளிகளிலும் இரண்டாம் மொழி என்ற பெயரிலிருந்து முதன் மொழி, பெயருக்கு மாற்றப்பட்டதே ஒழிய, அத்தமிழ் ஜெர்மன் முதலிய அன்னிய மொழிகளோடும் இந்தி, குஜராத்தி போன்ற பிற இந்திய மொழிகளோடும் பதினான்கு அல்லது பதினைந்தில் ஒன்றாகத்தானே இருக்கிறது. எனவே நீங்களோ உங்கள் அரசாங்கமோ செய்ய முடியாத ஒரு பெரிய தமிழ்த் தொண்டினை அவர் வள்ளியம்மாள் பள்ளி மூலம் செய்து வருகின்றார். அவர் தமிழுக்குத் தொண்டு செய்யவில்லை என்று குறை கூறமுடியுமா? நீங்கள் சொல்லுங்கள், என்று கேட்டாராம், அத்துடன் நில்லாது, தமிழ் நாட்டில் உள்ள அரசாங்கம்ே நடத்தும் மத்திய கல்விக் கூட்டங்களில் தமிழ் பயில விரும்புவாருக்குத் துணையாகத் தமிழைப் பல மொழிகளுள் ஒன்றாக கொண்டு வாருங்கள் என்று மத்திய அரசாங்கத்தோடு நீங்கள் தொடர்பு கொண்டு கேளுங்கள் என்று சொன்னாராம். ஆயினும் இன்னும் பல மத்திய தமிழ் நாட்டுக் கல்வி நிலையங்களில் தமிழ் பயில விரும்பும் மாணவருக்கு வழி இல்லாமல் இருக்கின்றது என்பதைப் பல பெற்றோர்கள் வருத்தத்தோடு சொல்வதைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். எங்கள் வளர்ச்சி கருதி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தார் பல நல்ல செயல்களைச் செய்தார்கள் என்று சொன்னேன். எனக்கெனத் தனியாக அளித்த மனையில் நான் பள்ளியினைத் தொடங்கியதை ஏற்றுக் கொண்ட தோடு, பக்கத்தில் இருந்த சுமார் 15 மனைப்பரப்புள்ள நிலத்தினை எங்களுக்கே தருவதற்கு அவர்களாகவே இசைந்து, ஆவன செய்துள்ளார். முதலில் எங்கள் பள்ளி யினை அடுத்துள்ள பகுதியினை 226 C என்ற எண்ணில்