பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 தனியாகப் பிரித்து எங்களுக்கு ஒதுக்கித் தந்தார்கள். விலையில் யாதொரு சலுகையும் எங்களுக்குத் தரவில்லை யாயினும், எங்கள் வளர்ச்சி கருதி நாங்கள் கேட்டுக் கொண்ட உடனேயே அந்த இடத்தை யாதொரு தடையும் சொல்லாது ஒதுக்கித் தந்தனர். 80 அடி சாலையினை ஒட்டிய பகுதிக்கு ஏலவிலைப்படி மன்ை ரூ. 11,000 வீதமும் உள்ளடங்கிய மனைகளுக்கு 8000 வீதமும் விலையிட்டுத் தந்தார்கள். எனவே அந்த மனைகள் யாதொரு கட்டுப் பாட்டுக்கும் நிபந்தனைக்கும் உட்பட்டதாக இல்லாமல் தனியார் ஒருவருக்குக் கொடுக்கும் வகையிலே தரப் பெற்றது. அடுத்து அதன் பக்கத்திலுள்ள மற்றப் பகுதி யினையும் (சுமார் 8 மனை) நாங்கள் கேளாமலே அவர்களே முன்னின்று எங்கள் வளர்ச்சி கருதி வலிய வந்து ஆட்கொள்ளும்' முறையில் உவந்து அளித்தார்கள், வீட்டு வசதிவாரியத்தின் 1-4-72 நாளிட்ட கூட்டத்தின் முதல் தீர்மானமாக இதை நிறைவேற்றி எங்களை ஏற்றுக் கொள்ளுகிறீர்களா? எனக் கேட்டுக்கொண்டனர். நாங்கள் மிக்க மகிழ்வோடு அதை ஏற்றுக் கொண்டோம். அதனையும், முற்றும் 80 அடிச் சாலையை ஒட்டி இருப்ப தால், 'ஏலவிலைக்கே (ரூபாய் பதினோராயிரம்) நாங்கள் எடுத்துக் கொள்ள இசைந்தோம். முறைப்படி, இரண்டிற்கும் மேலே கூறியபடி யாதொரு நிபந்தனையோ கட்டுப்பாடோ இல்லை. (எனினும் இடைவந்த வாரியத்தின் அரசியல் சார்புடைய தலைவர்களும் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தினரும் நிபந்தனை இருப்பதாகக் கருதிப் பலவகையில் தொல்லை தந்தனர். அவைப்பற்றிப் பிறகு விளக்கமாக எழுத நினைக்கிறேன்.) இந்த இரண்டு இடங்களையும் அன்றைய வீட்டுவசதி வாரியத்தார் அன்புடன் எங்களுக்குக் கொடுக்க, முறைப்படி நாங்களும் நான்கில் ஒரு பகுதியை முன் பணமாகக் கட்டி விட்டு, எங்கள் பொறுப்பில் நிலத்தை எடுத்துக் கொண்டு கட்டடங்களைக் கட்டத் தொடங்கி விட்டோம். இந்நிலத்துக்கு நின்ற முக்கால் பாகத் தொகை யினை மூன்று வருடங்களில் ஆறு தவணைகளாகக் கட்ட