பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 ஆணையிட்டனர். எங்கள் பொருள் நிலை அதற்கு இடம் தராத நிலையினை விளக்கி வேண்டிக் கொண்டதன் பேரில் ஏழு ஆண்டுகளில் பதினான்கு தவணைகளாகக் கட்டுமாறு பரிந்துரைத்து உதவினர். அதன்படியே ஆறு திங்களுக்கு ஒருமுறை, அத் தொகையினைக் கட்டிக் கொண்டு வந்து 1980ல் முற்றும் அடைத்து விட்டோம். எனவே முறையாக இந்த நிலமும் உடன் பதிவு வழி எங்கள் வசம் முற்றும் உரிமை யாக்கப் பெற்றது. இவ்வாறு பலவகையில் முயன்று பெற்ற இடங்களெல் லாம் கட்டடங்களால் நிறைவு செய்யப் பெறுவதை யாவரும் அறிவர். பள்ளி வளர வளர, அதன் தேவையும் வளர்ச்சி அடைந்து வருகின்றமையின் மறுபடியும் நாங்கள் 1977ல் வீட்டு வசதி வாரியத்தாரை வேண்ட, அன்றுள்ள வாரியக் குழுவின் வாரியத் தலைவர் 77 மனையினை எங்களுக்குத் தந்து உதவினர். அதற்குரிய நான்கில் ஒரு பகுதியினை.சுமார் இரண்டரை லட்சம் தொகையினை அப்போதே கட்டி, திங்கள்தோறும் தவணையும் கட்டி வந்தோம். இடையில் பல்வேறு காரணங்களால் பலர் பலவகையில் தொல்லை தந்தனர். எனினும் நாங்கள் முயற்சியாலும் நல்லவர் உதவி யாலும் இறையருளாலும் வெற்றி பெற்று, 1981 சூன்முதல் அங்கே செயல்படத் தொடங்கிவிட்டோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன். மத்திய கல்விக்குழுவின் இணைப்பில் எங்கள் பள்ளி இண்ைந்த பிறகு எங்கள் பள்ளி அரசாங்க ஒப்புதல் பெற்ற தாகிவிட்டது. எனினும் எங்கள் பள்ளிக்கு யாதொரு வகையிலும் அரசாங்க மானியமோ வேறு மானியங்களோ கிடையாது. முன் காட்டியபடி என் சொந்த வருமானங்கள் முற்றவும் இதில் ஈடுபடுத்திச் செயல் படுவதன்றி வேறு வகை யில்லை. பள்ளியில் பிள்ளைகள் கட்டுகின்ற சம்பளம் ஆசிரியர்களுக்கும் பிற செலவுகளுக்கும் ஈடுகட்டவே முடியாத நிலையில் சில ஆண்டுகள் கழிந்தன. எனவே தி.தி.-3