பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 இடையில் பல பெற்றோர்கள் வற்புறுத்தியதன் பேரில் 1974ல் ஒரு நாடகம் ஒன்று நடத்தினோம். (திரு. மேஜர் சுந்தரராஜன் குழுவினர்) பெரியார் திடலில் அந்த நாடகம் நடை பெற்றது. அதற்கென நுழைவுக் கட்டணம் இட்டு வசூல் செய்தோம். ஆனால், அந்த நாடகத்தில் 20, 000 அளவு தொகை பெற்ற போதிலும் அதில் நாங்கள் பெற்ற அனுபவம், இனி எக் காலத்திலும் இத்தகைய செயலை மேற் கொள்ள வேண்டாம் என்ற முடிவினையே, எங்களுக்குத் தந்தது. எனவே அன்று முதல் அத்தகைய பெருநாடகங்கள் அமைக்கவே கூடாது என்று திட்டமாக முடிவு செய்து பின்னர் இரண்டொரு ஆண்டுகளில் பிள்ளைகள் ஆசிரியர்கள் அல்லது விரும்பி வரும் பெற்றோர்கள் ஆகியவர்களைக் கொண்டு கலை நிகழ்ச்சிகள் அமைத்தோம். ஐந்து அல்லது பத்து ரூபாய் எல்லைக்கு மேலே போகாமல் நுழைவுச் சீட்டு இட்டும், அதற்கும் பல வசதி உள்ள பெரியோர்களே சிக்கல்களை உண்டாக்கித் தொல்லை தந்தனர். சில ஆசிரியர்கள் ஒத்துழைப்பும் இல்லை எனலாம். ஒரு சில ஆசிரியர்கள் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது போல்' மாற்றுப் பிரசாரம் மறைவாகச் செய்தனர். எனவே இனி இந்த வகையில்லாது வேறு தக்க வகையில் ஆவன செய்ய ஒருமுடிவு செய்தோம். எனவே பிறகு வளர்ச்சி நிதி என அமைத்துப் புதிதாகச் சேர்பவர்களுக்குத் தொடக்கத்தில் ஐம்பது ரூபாயும் பழைய மாணவர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் இருபத்தைந்து ரூபாயும் எனக் கணக்கிட்டு வாங்கி வந்தோம்; பின் நூறும் ஐம்பதும் என நின்றன. இந்த வகையில் பெரும் இடர்ப்பாடு இல்லை என உணர்கின்றோம். மேலும் அவர்கள் தரும் ஒவ்வொரு பைசாவும் எங்கள் சொந்த பைசா ஒவ்வொன்றுடன் கூடி, கண் எதிரே பல இலட்சக்கணக்கான மதிப்புடைய கட்டடங் களாகவும் நிலங்களாகவும் காட்சித் தருவதை உணர்ந்து பெற்றோர்கள் மனநிறைவும் மகிழ்ச்சியும் கொள்ளு இன்றனர். இந்த வகையில் பகல் உணவு கொள்ள மூடியிட்ட நல்ல இடம் இல்லை என்ற குறை சிலரிடம் இருந்தது