பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o 35 எங்களுக்கும் தெரியும். நாங்களும் பல சிக்கல்களை எழுப்பியுள்ள நகராண்மைக் கழகம், பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஆகியவற்றின் இடர்ப்பாடுகளெல்லாம் விரைவில் நீங்கப் பெற்று அந்த குறையும் இல்லையாக நீண்ட உணவுக் கூடமும் அமைத்துள்ளோம். 1974ல் மத்திய கல்விக் குழுவின் இசைவு பெற்ற பிறகு மெல்ல மெல்லத் தவழ்ந்த வள்ளியம்மாள் பள்ளி எனும் குழந்தை எழுந்து நின்று தளர் நடையிடத் தொடங்கியது. அது தவழும் போதெல்லாம் கைகொடுத்து நடத்திச் செல்லப் பலர் உடன் நின்று உதவினர் என்பதையும் இங்கே குறிக்கக் கடமைப்பட்டுள்ளேன். கொட்டகைகள் சரிவு, கொட்டகைகள் அக்கினி தேவனுக்கு இரை, கட்டடங்கள் மழையில் பிளவு, சரிவு, பக்கத்து மனைக்காரர்களின் தொல்லை இன்னபிற சிக்கல்களுக்கு இடையே இன்று உங்கள் முன் வானோங்கி நிற்கும் கட்டடங்கள்-நிலைத்த கட்டடங்கள் காட்சியளிக்கின்றன. ஆயினும் இவற்றைக் கண்டு பொறாமையால் சில உயர் வட்டங்களிலுள்ள "பெரியவர் தம் கொடுமையான தாக்குதல்களும் இல்லாமல் இல்லை. மத்திய அரசாங்க இசைவு பெற்றபின் பிள்ளைகள் அதிகமாகச் சேர விரும்பினர். மேலும் எங்கள் பள்ளியின் தரம் அண்ணாநகரில் மட்டுமன்றி, சென்னையின் பிற பகுதி களிலும் வெளியூர்களிலும் கேட்கப் பெறுவதால் இங்கு இடம் மாறி வருகின்ற அனைவரும் முதலில் வள்ளியம்மாள் பள்ளியிலேயே இடம் தேடி வருகின்றனர். சில பெற்றோர் இங்கே வந்து இந்தப் பள்ளியில் இடம் கிடைத்த பிறகே அண்ணாநகரில் வீடு பிடிக்க உத்தேசித்துள்ளோம் எனக் கூறுகின்றனர். இந்த நிலை எங்களுக்கு ஒருபுறம் பெருமகிழ்ச்சி தந்தாலும் இந்த நற்பெயரை என்றும் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பினை எண்ணும் போது அச்சம் உண்டாகின்றது. பள்ளியின் முதல்வர் அவர் களும் ஆசிரியர்களும் ஒல்லும் வகையான் தரம் கெடாத