பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 வகைக்கு அன்றாடம் வழிவகைகளை வகுத்துச் செயல் படுவது மனதுக்கு ஆறுதலாக அமைகின்றது. வகுப்பில் மாணவர்களைத் தேர்வின் அடிப்படையிலே சேர்க்கிறோம். குழந்தைகள் (I. K. G.) வகுப்பு ஒன்றைத் தவிர, மற்றைய வகுப்புகள் அனைத்துக்கும் நுழைவுத் தேர்வு உண்டு. சிலர் U.K.G. Std இவைகளுக்கெல்லாம் கூடத் தேர்வா எனக் கேட்பர். அவரவர் தகுதிக்கு ஏற்பத் தேர்வை அமைத்து, அவரவர் தகுதி தெரிந்து உரிய வகுப்பில் இடம் கொடுத்து-சிறப்பாக இந்த எல்லையில் உட்பட்டவர் களுக்கு இடங்கொடுத்து-ஆவனசெய்து வருகிறோம். இதனால் எங்களுக்கு ஆண்டு தோறும் சில சில பெற்றோர் கள் விரோதி'களோ என்னுமாறு இருக்கின்றனர். ஒரே குடும்பத்திலிருந்து மூவர் தேர்வு எழுதினால் இருவர் தகுதி கண்டு உரிய வகுப்பு தந்து மூன்றாமவர் தகுதியில்லாமையில் ழ்ே வகுப்பில்தான் சேர்க்க வேண்டும் என்றால் மனம் வருந்த எங்களை வையும் நல்லவரும் உள்ளனர். மற்ற இரண்டு பிள்ளைகளுக்கு இடம் தந்தவர்கள் இந்த ஒரு பிள்ளைக்கு இடம் தராத காரணத்தை இவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை. இவ்வாறு பலவகையில் ஆண்டுத் தொடக்கத்தில் அல்லல் பட்டும், பிறகு முறையாக வகுப்பு நடக்கும் போதும் ஒரு சில பெற்றோர்களால் சில சிக்கல்கள் உண்டாகும் (இவை பற்றி எல்லாம் பெற்றோர்கள்' என்ற பகுதியில் தனியாக எழுத நினைக்கிறேன்) ஆயினும் அவற்றையெல்லாம் கடந்து, 10 + 2 எனப்பெறும் வகுப்புகள் அனைத்தையும் பெற்று, 12ம் வகுப்பு மாணவிகளைத் தேர்விக்கு அனுப்பினோம். முதல் ஐந்து ஆண்டுகளிலும் தேர்வுக்குச் சென்ற மாணவியர் அனைவரும் நல்ல நிலையில்-முதல் இரண்டாம் வகுப்பு நிலையிலேயே வெற்றி பெற்றுள்ளமையை ஈண்டு குறிப்பாக வேண்டியுள்ளது. பள்ளி உயர் பள்ளியாக (Junior College) வளர்ந்து விட்டமையின் அதற்கேற்ற வகையில் ஆய்வுகளம் முதலியவற்றையும் நூல் நிலையம் முதலியவற்றையும்