பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ვ7 வகுப்பறைகளையும் அமைக்க வேண்டியுள்ளது. புதிய கட்டடம் முற்றும் ஏறக்குறைய அவர்களுக்கேதான் பயன் பட்ட்து. முதல் தளமாகிய பெரு மண்டபத்தில் பலப்பல கூட்டங்கள் நடைபெறுகின்றன. இரண்டாம் தளம் முற்றும் ஆய்வுக் கூடங்களாகும். ஆய்வுக் கூடங்களில் உள்ள பொருள்களில் மதிப்பு சுமார் இரண்டு லட்சத்துக்கும் மேலாகும். மேலுள்ள தளத்தில் வகுப்பறைகள் உள்ளன. நூல் நிலையமும், தொழிற் கூடமும் நல்ல முறையில் செயல்படுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக, புதிதாக வாங்கிய இடத்தில் கட்டங்களைக் கட்டிமுடித்தபின், நம் தமிழக அரசின் முறையான இசைவுபெற்று மெட்ரிகுலேஷன் (Matri culation) பள்ளியினை நடத்தி வருவதும் சென்ற ஆண்டில் (1986 மே) பத்தாம் வகுப்பில் 100க்கு 100 மாணவர் தேர்ச்சிபெற்று, அதற்கான கேடயத்தை அரசாங்கத்திடம் பெற்றதும் குறிக்கத்தக்கன. சென்ற ஆண்டே மேல் பதினோறாம் வகுப்பினைத் தொடங்க இசைவு பெற்ற போதிலும், காலம் தாழ்த்தமையின், இந்த ஆண்டே அங்கே 11-ம் வகுப்பு (+2ல் முதல் வருடம்) தொடங்கப் பெற்றது. கணிப்பொறி உட்பட-ஆசிரியர் பயிற்சி உட்பட பல பாடங் கள் சிறப்புப் பாடங்களாக இடம் பெற்றுள்ளன. அதே இடத்தில் மூன்றாண்டுகளுக்குமுன் தக்கவர் துணையுடன் பொறியியல் சார்புடை சான்றிதழ் வகுப்புகள் நடத்த நினைத்துத் தொடங்கிய போதிலும் அதை மேற்பார்வை யிட்டு வளர்க்க தக்கவர் இன்மையின் அம் முயற்சி விடப் பெற்றது. அரசாங்கமும் பல்கலைக் கழகமும் இசைவுதரின் தொடர்ந்து கல்லூரியும் மேநிலை ஆய்வு களமும் அமைக்க விருப்பம். யாவும் இறையருளும் அன்னையின் அருளும் நல்லவர் வாழ்த்தும் உதவியும் அமையின் பயன் விளையும் எனும் துணிபுடையோம். சில பள்ளிகளில் பல்லாயிரக் கணக்கில் பணம்பெற்று மாணவர்களைச் சேர்க்கும் வகையில் நாங்கள் செயல்படுவு