பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பெற்றாள் வளர்த்தாள் பெயரிட்டாள்! பச்சையப்பன் கல்லூரியில் 1944ல் என் பணியின்ை த் தொடங்கினேன். அது முதல் நான் பிள்ளைகளை வளர்த்த தோடு, என்னையும் வளர்த்துக் கொண்டேன். மாணவர் களுக்குக் கல்வி பயிற்றியதோடு, நானும் மேலும் பயின்றேன். என்னையும் என்னோடு பணியாற்றிய பிற ஆசிரியர்களையும் மேலும் முயன்று ஆராய்ச்சிப் பட்டம் பெற வேண்டும் என அப்போது தமிழ்த் துறைத் தலைவராய் இருந்த மோசூர் கந்தசாமி முதலியார் அவர்கள் அடிக்கடி சொல்லி வற்புறுத்துவார்கள். டாக்டர். மு. வரதராசனார் அவர்கள் அந்த வகையில் ஆராய்ச்சி செய்து (M.O.L.) எம்.ஓ.எல். பட்டம் பெற முயன்று வெற்றியும் பெற்றனர். அடுத்திருந்த டாக்டர் மொ. அ. துரைஅரங்கனார் அவர் களும் அவ்வாறே ஆய்வுப் பட்டம் பெற ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். எனவே நான் அவர்களுக்கு அடுத்து அந்த வகையில் ஆராய்ச்சி செய்ய வேண்டும் எனத் துறைத் தலைவர் வற்புறுத்தினார். எனவே நான் சேர்ந்த முதல் ஆண்டே எம். லிட் ஆய்வுப் பட்டத்திற்கெனப் பதிவு செய்து கொண்டேன். அந்தக் காலத்தில் "பீ.ஓ.எல் பட்டம் பெற்றவர்கள் எம்.ஓ.எல் ஆய்வுப் பட்டம்தான் பெறலாம் என்ற விதி இருந்தது. ஆனால் சென்னைப் பல்கலைக் கழகம் அதைத் தளர்த்தி எம்.லிட் பட்டமும் பெற வாய்ப்பு எனக்கு அளித்தது. அந்த மாற்றத்தின் வழியே முதன் முதலாக நான் பதிவு செய்து கொண்டேன். அப்போதெல் லாம் தமிழாசிரியராயினும் ஆய்வுப்பட்டங்கள் பெற