பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 எழுதுவது ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும் என்பது நியதி. சட்டம் அவ்வாறு திட்டமாகக் கூறாவிடினும் அது ஒரு வரன்முறையாக இருந்தது. பின்னால் திரு. பக்தவத் சலம் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது அவரிடம் இந்த முறை பற்றி நான் விளக்கிக்கூற, இது பற்றிய கேள்வியை அவர் எழுப்பி அவர்கள் துணைவேந்தருடன் (டாக்டர் இலட்சுமணசாமி முதலியார்) கலந்த பிறகு தமிழிலும் எழுதலாம் என்ற நிலை உண்டாயிற்று. நான் என் ஆய்வுக்கு மூவர் தேவாரத்தை எடுத்துக் கொண்டேன். (“Historical Studies in Thevaram Hymns –G3 aims, 366) வரலாற்று ஆய்வு). இந்தத் தலைப்பைத் தந்தவர் டாக்டர். ரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள். அதன் படியே இரண்டு ஆண்டுகள் முயன்று 1947ல் ஆய்வினைப் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பி. எம்.லிட் பட்டத்தையும் பெற்றேன். கல்லூரியில் அதற்குள் பலமாற்றங்கள் நடைபெற்றன. துறைத்தலைவர், முதல்வர் இருவரும் மாறினர். டாக்டர் மு.வ. துறைத்தலைமை ஏற்றார். நாங்கள் இருவரும் வேறுசிலரும் சேத்துப்பட்டில் ஒரே இடத்தில் குடியிருந் தோம். எங்கள் குடும்பங்கள் இரண்டும் இணைந்து ஒரே குடும்பம் என வாழ்ந்தன. மற்றும் திரு. துரை அரங்கனாரும் திரு. பாஷ்யராமானுஜம் என்ற கல்லூரி எழுத்தரும் எங்களுக்கு அடுத்து வாழ்ந்தனர். நாங்கள் நால்வரும் சில நாட்களில் இரவு நெடு நேரம் வரையில் திரு. பாஷ்யம் அவர்கள் தெருத் திண்ணையில் அமர்ந்து பலப்பல பொருள் களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்போம். கல்லூரி, அரசியல், சமூகப் பொருளாதார இயல் போன்ற பல பொருள் கள். பேசப்பெறும். அப்பொழுதெல்லாம் நினைத்திருந்தால் அங்கே பக்கத்திலே நல்ல இடங்களைக் குறைந்த விலைக்குப் பெற்றுப் பள்ளிக் கூடங்கள் தொடங்கி இருக்கலாம். ஆயினும் எனக்கு அப்போதெல்லாம் அந்த எண்ணம் தோன்றவில்லை. காரணம் என் மாதச் சம்பளம் 75 ரூபாய் படி 6.4.0 (6.25) என இருந்தமையே. மேலும் கிராமத்திலும்