பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 என் அன்னையர் இருவரும் இல்லையாதலால், நில வருமானமும் நேரடிப் பார்வையில் இல்லாத காரணத்தால், ஒரளவு குறைந்து போயிற்று. எனவே அந்த எண்ணம் என் மனதில் எழுந்தாலும் செயலாற்றா நிலையில் அமைதியாக வாழ்ந்து வந்தேன். 1947ல் வாலாஜாபாத்தில் (எங்க சொந்த ஊர் - பயின்ற இடம்) ஒர் உயர் நிலைப்பள்ளி அமைக்க வேண்டும் என்ற ஏற்பாடு இருந்து வந்தது. அதை எப்படித் தொடங்கு வது? யார் நடத்துவது? போன்ற சர்ச்சைகள் எழ, அத் காலத்தில் மாவட்ட ஆட்சியின் தனி அலுவலராக இருந்த திரு. புருடோத்தம முதலியார் அவர்கள் வழி வகுத்துக் தந்தார்கள். ஐந்து ஏக்கர் நிலமும் இருபத்தையாயிரம் ரூபாயும் கொடுத்தால் மாவட்ட ஆட்சிப் பொறுப்பில் வாலாஜாபாத்தில் பள்ளி நடத்தலாம் என்றனர். எனினும் அங்கே உள்ளவர்தம் உட்பூசலால் ஓராண்டு வீணே கழிந்தது. அந்த ஆண்டில்தான் என் கடவுளர் போற்றும் தெய்வம் - கண்ணகி என்பது பத்தாம் வகுப்புக்குப் பாடமாக அமைந்தது - பதிப்பாளர் பகுதிபோக எனக்கு ஐயாயிர ரூபாய் அதில் வந்து சேர்ந்தது. அதில் பெரும் பகுதியினைப் பள்ளிக்கு ஒதுக்கித் தந்தேன். அப்பள்ளி அமைப்பின் செயலாளனாக நான் பணியாற்றினேன். இந்து மதபாடசாலை நிறுவனர் வா. தி. மாசிலாமணி முதலியார் அவர்களும் வேறுசிலரும் ஆயிரம் ஆயிரம் எனத் தந்தனர். ஆயினும் அவ்வூரில் ஏழையாய்ப் பிறந்து என்னோடு இளமையில் கல்வி பயின்று, பின் சென்னையில் வாணிபம் செய்து செல்வாரன தேவராச முதலியார் அவர்கள் பள்ளிக் குழுவின் தலைமை ஏற்ற பிறகுதான் பள்ளி உருவாகும் நிலை ஏற்பட்டது. அப்போது அவர் அப்பஞ்சாயத்தின் தலைவராகவும் இருந்தார். அது மட்டுமன்றி அவருக்கும் எனக்கும் நெருங்கிய நண்பராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் தாமே முன் வந்து இரண்டு நாடகங்களை அவ்வூரில் நடத்தி அதில் வந்த தொகையினைப்