பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பள்ளி மூலதனத்துக்கென அளித்தார். அதில் மூவாயிரத்து ஐநூறுதான் வந்தது என்றாலும் அன்று அது பெரிய தொகையாகும். அப்படியே பொதுத்துறை அமைச்சராக இருந்த திரு. பக்தவத்சலம் அவர்கள் அக்காலத்திய கலெக்டர் வழியே எங்களுக்கு ஐந்து ஏக்கர் நிலத்தை இனாமாகப் பெற உதவினார். அண்ணாவும் அவர்களும் அரசியல் நெறியில் அன்றே இருதுருவங்களாக இருந்த போதிலும், எங்கள் பள்ளிக்கு இருவரும் இணைந்தே உதவினர். அப்படியே பள்ளியின் தொடக்கவிழா, கட்டிடக் கால்கோள் விழா போன்றவற்றுள் இருவருமே கலந்து கொண்டு சிறப்புச் செய்தனர். இருவரும் உளத்தால் இணைந்தவர்களே என்று நாங்கள் பாராட்டுவோம்! என்றும் அவர்கள் இருவரைப்பொறுத்தவரையில் என்னிடம் பற்றும் பாசமும் கொண்டவர்கள் என்பதை என்னல் மறக்க முடியாது. இங்கே எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. 1967ல் முதல்வர் பக்தவத்சலம் மாறி முதல்வர் அண்ணா ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தார். அவ்வாண்டு செப்டம்பரில் பக்தவத் சலம் அவர்களின் பிறந்தநாள்விழா நடைபெற்றது. அக் குழுவின் செயலாளனாக நான் பணியாற்றினேன். யாரைத் தலைவராக அழைப்பது என்ற கேள்வி எழ, முதல் அமைச்ச ராகிய அண்ணாவை அழைக்கலாம் என்றேன் நான். ஆனால் குழுவில் அனைவரும் அவர் வந்தால் நல்லதுதான், ஆனால் வரமாட்டார்; எனவே வேறு யாரையாவது தேர்ந்தெடுக்க லாம் என்றனர். நான் ஏதோ ஒரு துணிவில் அப்பொறுப்பை என்னிடம் விட்டு விடுங்கள் என்று சொல்ல, அனைவரும் இசைந்தனர். நான் நேரே நூங்கம்பாக்கம் அவின்யுரோடு, அண்ணாவின் இல்லத்தில் சென்று இந்தச் செய்தியைச் சொன்னவுடன் இதை விட எனக்கு வேறு என்ன வேலை: கட்டாயம் வருவேன்' என்று சொல்லி நாள், நேரம், இடம் முதலியவற்றைத் தனி அலுவலரிடம் சொல்லிக் குறித்துக் கொள்ளச் சொன்னார். அந்த விழா திருவல்லிக்கேணி நேஷனல் மகளிர் பள்ளி அரங்கத்தில் நடைபெற்றது.